அடுத்த மாதம் இலங்கை செல்கிறார் பிரதமர் மோடி! புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது…
பிரதமர் மோடி அடுத்த மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் விஜிதா ஹெராத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி அடுத்த மாதம் இலங்கை செல்ல உள்ளார். மோடி பிரதமராக பதவியேற்ற பின் பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார். ஒவ்வொரு நாட்டுடனும் பரஸ்பர உறவை மேம்படுத்த உதவியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒவ்வொரு நாடுகளுக்கு செல்லும்போதும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகுவதும், புதிய திட்டங்கள் தொடங்கி வைக்கப்படுவதும் உட்பட பல முக்கிய அம்சங்கள் வெளிநாட்டு பயணத்தின் போது நடைபெறும்.
இதையும் படிங்க: சட்டத்தின் பின் ஒளிந்தாலும் மோடி அரசு தோர்த்து விட்டது..! வறுத்தெடுத்த ராகுல்காந்தி..!
அதன் அடிப்படையில் மோடி பிரதமராக பதவி ஏற்ற பின் இலங்கை செல்வது இது 4ஆவது முறையாகும். எனினும் இலங்கை பிரதமராக அனுரகுமார திசநாயக பொறுப்பேற்ற பின் பிரதமர் மோடி அங்கு செல்வது இதுவே முதல்முறை.
முன்னதாக, இலங்கை பிரதமர் அனுரகுமார திசநாயக, கடந்த ஆண்டு இறுதியில் மூன்று நாட்கள் இந்தியாவுக்கு வந்திருந்தார். அப்போது முதல்முறையாக இந்தியாவுக்கு வந்திருந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து இருதரப்பு உறவு குறித்து பிரதமர் மோடியும், அதிபர் அனுரகுமாரவும் பேசினர்.
தற்போது, பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தை அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் விஜிதா ஹெராத் உறுதி செய்துள்ளார். கடந்த ஆண்டு அனுரகுமார திசாநாயக்கவின் டெல்லி பயணத்தின் போது எட்டப்பட்ட ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாத தொடக்கத்தில் இலங்கை வருவார் என்று இலங்கை நாடாளுமன்றத்தில் பட்ஜெட் ஒதுக்கீடு குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போது வெளியுறவு அமைச்சர் விஜிதா ஹேராத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கூறியுள்ள வினிதா ஹெராத், நாங்கள் அண்டை நாடான இந்தியாவுடன் நெருங்கிய நட்பை பேணி வருகிறோம் என்றும் இந்தியாவுக்கான எங்களுடைய முதல் மூலோபாய சுற்றுப் பயணத்தின்போது இருநாட்டு ஒத்துழைப்பு தொடர்பாக பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் மோடி இலங்கை வரும்போது, இருநாடுளுக்கு இடையில் புதிய பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருக்கிறது என தெரிவித்த அவர், தேசிய நலனை பேணும் விதமாக வெளிநாட்டு கொள்கையில் எந்தவொரு நாட்டிற்கும் ஆதரவாக இல்லாமல் தொடர்ந்து நடுநிலையாக செயல்படுவோம் என விஜிதா ஹெராத் கூறியுள்ளார்.
2023 ஆம் ஆண்டு இலங்கை மின்சார வாரியமும் இந்தியாவின் NTPC-யும் கிழக்கு திருகோணமலையின் சம்பூர் நகரில் 135 மெகாவாட் சூரிய மின் நிலையம் கட்ட ஒப்புக்கொண்டதாகவும், பிரதமர் மோடி பயணத்தின்போது இந்த சூரிய மின் நிலையம் திறந்து வைக்கப்பட இருக்கிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு மகுடம் சூட்டிய மொரீஷியஸ்..! உயரிய விருதை அறிவித்து மரியாதை..!