×
 

வரும் 22, 23ம் தேதி.. சவுதி அரேபியா செல்கிறார் பிரதமர் மோடி..!

வரும் 22 மற்றும் 23ம் தேதிகளில் பிரதமர் மோடி சவுதி அரேபியா செல்ல உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி வரும் 22 மற்றும் 23ம் தேதிகளில் வளைகுடா நாடான சவுதி அரேபியாவுக்கு இருநாட்கள் பயணமாகச் செல்ல உள்ளார். அந்நாட்டின் இளவரசர் மற்றும் பிரதமர் முகமது பின் சல்மான் அழைப்பையடுத்து, பிரதமர் மோடி சவுதி அரேபியாவுக்குச் செல்கிறார். பிரதமர் மோடி இதற்கு முன்பாக 2016, மற்றும் 2019ம் ஆண்டில் சவுதி அரேபியாவுக்கு சென்றிருந்த நிலையில் இது அவரின் 3வது பயணமாகும். 

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் “சவுதி அரேபியா இளவரசர், பிரதமர் முகமது பின் சல்மான் 2023, செப்டம்பரில் இந்தியாவுக்கு பயணித்திருந்தார். அந்த பயணத்தின்போது ஜி20 மாநாட்டிலும் பங்கேற்று, இந்தியா சவுதி அரேபியா ராஜாங்க கூட்டுறவுக் கவுன்சிலிலும் பங்கேற்றார்.

இதையும் படிங்க: மோடியின் உற்சாக சந்திப்பு தோற்றுப்போனது! வங்கதேச விவகாரத்தில் அதிருப்தி தெரிவித்த கார்கே…

இந்தியா, சவுதி அரேபியா நீண்டகாலமாக நல்ல நட்புறவோட இருந்து வருகிறது. வரலாற்று ரீதியாக வர்த்தக உறவுகள், சமூக கலாச்சார தொடர்பும் இருநாடுகளுக்கு இடையே இருந்து வருகிறது. ராஜாங்க ரீதியான கூட்டாளிகளான இரு நாடுகளும், இருதரப்பு உறவுகளையும், நட்புறவையு் பல்வேறு துறைகளில் பகிர்ந்து கொள்கின்றன. குறிப்பாக பாதுகாப்பு, அரசியல், வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, தொழில்நுட்பம், சுகாதாரம், கல்வி, கலாச்சாரம், இரு நாட்டு மக்களின் உறவு ஆகியவற்றிலு் நட்புறவு தொடர்கிறது.

கடந்த 10 ஆண்டுகளாக இந்தியா, சவுதி அரேபியா நட்புறவு வலிமையாகவும், பல்வேறு துறைகளில் கூட்டுறவுடன் செயல்படுகின்றன. இரு நாடுகளுக்கு இடையே முதலீடு அதிகரித்துள்ளது, பாதுகாப்பு துறையில் கூட்டுறவு, பல்வேறு துறைகளில் பரஸ்பர பகிர்ந்தளிப்பு நடந்துள்ளன. 

பிரதமர் மோடி 3வது முறையாக சவுதி அரேபியாவுக்கு செல்வது இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவை இன்னும் ஆழமாக  எடுத்துச் செல்லும், கூடுதலாக துறைகளில் இரு நாடுகளும் சேர்ந்து பயணிக்க  உதவும். பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களில் இரு நாடுகளும் ஒருவரொருக்குவர் ஆதரவுடன் செல்லும். இந்தியாவின் 5வது வர்த்தகரீதியான பெரிய கூட்டாளி நாடு சவுதி அரேபியா.

2023-24ம் ஆண்டில் சவுதி அரேபியாவில் இருந்து 31.42 பில்லியன் டாலருக்கு இறக்குமதியும், 11.56 பில்லியன் டாலருக்கு ஏற்றுமதியும் செய்துள்ளது. இந்தியாவில் இருந்து பெரும்பாலும் அரிசி, பெட்ரோலியப் பொருட்கள், ரசாயனம், ஜவுளி, உணவுப் பொருட்கள், சிராமிக் டைல்ஸ் ஏற்றுமதியாகிறது. சவுதி அரேபியாவில் இருந்து கச்சா எண்ணெய், எல்பிஜி, உரம், ரசாயனம், பிளாஸ்டிக் பொருட்கள் இறக்குமதியாகின்றன. ரிலையன்ஸ் ஜியோ, ரிலையன்ஸ் ரீடைல், ஓயோ ஹோட்டல்ஸ், ஹெல்த்டெக் ஹெல்த்பை ஆகிய நிறுவனங்களில் சவுதி அரேபிய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.

இதையும் படிங்க: யுனெஸ்கோ பதிவேட்டில் கீதை, நாட்டிய சாஸ்திரம்..! ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை என பிரதமர் உற்சாகம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share