பா.ம.க. தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம்... ராமதாஸ் அதிரடி முடிவு..!
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பொறுப்பை நானே எடுத்துக் கொள்கிறேன். 2026 சட்டமன்ற தேர்தலில் இளைஞர்களை வழிநடத்தவே இந்த முடிவு.
"பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பொறுப்பை நானே எடுத்துக் கொள்கிறேன். 2026 சட்டமன்ற தேர்தலில் இளைஞர்களை வழிநடத்தவே இந்த முடிவு. அன்புமணி பாமக-வின் செயல் தலைவராக செயல்படுவார்” என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராமதாஸ் கூறுகையில், ''பாமக தலைவராக நான் பொறுப்பேற்றதற்கு காரணங்கள் பல உண்டு; எல்லாவற்றையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாது; கூட்டணி உள்ளிட்ட விஷயங்களை கட்சியின் நிர்வாகிகளை அழைத்துப் பேசி முடிவெடுப்போம். 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டும், இளைஞர்களை வழிநடத்தவும் இந்த முடிவை எடுத்துள்ளேன்.
சட்டமன்றத்திற்கோ, நாடாளுமன்றத்திற்கோ சென்றதில்லை. பதவி ஆசை எனக்கு இருந்ததில்லை. கூட்டணி குறித்த விஷயங்களுக்கு நிர்வாகிகளை அழைத்து பேசி முடிவெடுப்போம்.அன்புமணி நீக்கம் செய்யப்படதற்கான காரணங்கள் பின்னர் தெரிவிப்போம்'' எனத்தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பாமக எடுத்த திடீர் முடிவு! - பேரதிர்ச்சியில் தமிழக அரசியல் களம்..!
தமிழகத்தில் திமுக- அதிமுக என மாறி மாறி கூட்டணி அமைத்து வரும் பாமக, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டது. ஆனால் இந்த தேர்தலில் தருமபுரி தொகுதி தவிர மற்ற தொகுதிகளில் டெபாசிட் இழந்தது.
இந்த நிலையில் பாமக நிறுவனராக உள்ள ராமதாசுக்கும், தலைவராக உள்ள அன்புமணிக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த மோதல் டிசம்பர் 28ம் தேதி இளைஞர் அணி தலைவர் நியமனம் செய்யப்பட்டப்போது பகிரங்கமாக வெளிப்பட்டது. இதனையடுத்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதான உடன்பாடு ஏற்பட்டது.