கர்ப்பிணி மனைவி, பலாத்காரம் செய்த நண்பர்கள..!! வீடியோ காலில் ரசித்த சைக்கோ கணவன்
கர்ப்பிணி மனைவியை, நண்பர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதை வெளிநாட்டில் இருந்த படி செல்போனில் ரசித்த சைக்கோ கணவன்...
சில நேரங்களில் உண்மை நிகழ்வுகள்ஃஃ, கற்பனைக்கு எட்டாத விதத்தில் உள்ளன. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கர்ப்பிணி மனைவி ஒருவர், நண்பர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதை வெளிநாட்டில் இருந்த படி செல்போனில் ரசித்த "சைக்கோ" கணவன் பற்றி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் நான்கு குழந்தைகளுக்கு தாய் என்பது அடுத்த சோகம். இது பற்றிய விவரம் வருமாறு:-
35 வயதான அந்த பெண், உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஸாகர் நகரில் வசித்து வருகிறார். கடந்த 2010 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் அந்த பெண்ணுக்கு திருமணம் நடந்தது. அவர்களுக்கு இரண்டு மகன்கள்,( 13 மற்றும் 3 வயதுகளில்) இரண்டு மகள்கள் (11 மற்றும் ஏழு வயதில்)என நான்கு பிள்ளைகள் உள்ளனர்.
இதையும் படிங்க: போலீஸ் நிலைய பாத்ரூமில், புகார் அளிக்க வந்த பெண்ணுடன் உல்லாசம்: துணை சூப்பிரெண்டு சஸ்பெண்ட்; 'வைரல் வீடியோ' வெளியானது எப்படி ?
சவுதி அரேபியாவில் ஆட்டோமொபைல் மெக்கானிக்காக கணவர் பணிபுரிந்து வருகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் அவர் ஊருக்கு வந்து மனைவியை பார்ப்பதை வழக்கமாக் கொண்டிருந்தார். கடந்த 2 வாரங்களுக்கு முன்பாக ஊருக்கு வந்திருந்த அவருக்கும் மனைவிக்கும் தகராறு ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து அந்தப் பெண் தனது குடும்பத்தினருடன் புலந்த்ஷாஹர் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ஸ்லோக் குமாரை சந்தித்து புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் தனது கணவர் பற்றிய அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டு இருந்தார். புகாரில் அவர் கூறி இருந்ததாவது:-
"இந்தப் பகுதியில் வசிக்கும் எனது கணவரின் நண்பர்கள் இரண்டு பேர்கடந்த மூன்று ஆண்டுகளாக என்னை பாலியல் பலாத்காரம் செய்து வருகிறார்கள். நான் எதிர்ப்பு தெரிவித்தால் என்னை தாக்கவும் செய்வார்கள்.
எனது கணவரின் சம்மதத்தோடு இந்த அநாகரிகச் செயல் நடைபெற்றதால் குடும்ப கௌரவம் கருதியும் யாரிடமாவது சொன்னால் என்னை விவாகரத்து செய்து விடுவதாக கணவர் மிரட்டியதாலும், எனது பிள்ளைகளின் எதிர்காலம் கருதியும் இதுவரை யாரிடமும் எதுவும் சொல்லாமல் இந்த வன்கொடுமையை பொறுத்துக் கொண்டேன்.
எனது கணவரிடம் கேட்டால், "நான் நண்பர்களிடம் பணம் வாங்கி விட்டேன். அதனால் அவர்கள் சொல்கிறபடி நடந்து கொள்" என்றும் கூறிவிடுவார். அத்துடன் என்னை அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்த காட்சிகளை படமாக எடுத்து அனுப்பி வைக்க, அவர் சவுதி அரேபியாவில் இருந்து செல்போனில் அந்த காட்சியை பார்த்து ரசிப்பதும் எனக்கு தெரிய வந்தது.
இந்த முறை கணவர் ஊருக்கு வந்தபோது இந்த பிரச்சனை தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டது. என்னால் மேலும் பொறுக்க முடியவில்லை. அதன் பிறகு நான் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு எனது பெற்றோர் குடும்பத்தினரையும் அழைத்துக் கொண்டு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறேன்.
நான் இப்போது ஒரு மாதம் கர்ப்பமாக இருக்கிறேன். எனது கணவர் மீதும் அவர்களுடைய இரண்டு நண்பர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து எனக்கு பாதுகாப்பு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்".
இவர் அந்த புகாரில் அந்தப் பெண் கூறி இருக்கிறார்.
பாதிக்கப்பட்டபெண்ணின் சகோதரர் ஒருவரும் அதே பகுதியில் ஆட்டோமொபைல் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். அவர் போலீசாரிடம் கூறும் போது "அந்த பெண்ணின் கணவர் சமீபத்தில் வந்த பிறகுதான் மூன்று ஆண்டுகளாக நடைபெற்ற கொடுமைகளை தங்களிடம் சொல்லி கதறி அழுததாக" குறிப்பிட்டார். கண்ணின் கணவரும் நண்பர்களும் வெளிநாடு தப்பிச் செல்ல வாய்ப்பு இருப்பதால் அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் அவர் போலீசாரிடம் வலியுறுத்தினார்.
இது குறித்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு செய்தியாளர்களிடம் பேசுகையில், "புகாரை ஏற்று நாங்கள் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் சம்பவம் என்று கூறுவதால் அது பற்றி உள்ளூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று உறுதி அளித்தார்.
நாகரிகம் என்ற பெயரில்..
மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பது உண்மைதான். அதற்காக நாகரீகம் வளர வளர நமது கலாச்சாரம் இப்படியா மாற வேண்டும்? ஏற்கனவே தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் சமூக ஊடகங்களின் தாக்கத்தினால் இது போன்ற கலாச்சார சீரழிவுகள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.
மனைவிகளை மாற்றிக் கொள்வது போன்ற சம்பவங்கள் வெளிநாடுகளிலும் இந்தியாவில் சமூக ஊடக அளவிலும் முன்பு இருந்தது. இப்போது தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் அதுபோன்ற கலாச்சார சீரழிவு குற்றங்கள் நடைபெறுவதும் அது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதும் மிகவும் சகஜமாகி விட்டன.
இதையும் படிங்க: பெண் பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக அவதூறு…எஸ்.வி.சேகர் சிறைத்தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்