கல்லூரி பேராசிரியருக்கு பாலியல் தொல்லை.. கல்லூரி வளாகத்திலேயே பேராசிரியரை வெளுத்த மாணவர்கள்..!
சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில், பேராசிரியர் ஒருவர் சக பேராசியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக பெண் குழந்தைகள், சிறுமிகள், பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் பாலியல் அத்துமீறல் குறித்த பெண்களின் விழிப்புணர்வும் அதிகரித்து வருகிறது. பெண்கள், சிறுமிகள் எவராயினும் தனக்கு நேரும் துயரத்தை மறைக்காமல், மற்றொரு பெண் இதுபோல் பாதிக்கப்பட கூடாது என்று எண்ணி துணிந்து போராடி வருகின்றனர். தங்களுக்கு ஏற்படும் கொடுமைகளை தோலுரித்து காட்ட தயங்குவது இல்லை சமகால பெண்கள்..
பொதுவாக இதுபோன்ற பாலியல் குற்றங்கள் பெருக, மது, கஞ்சா போன்ற போதை வஸ்துகள் பெரும் காரணமாக கூறப்படும். இத்தகைய போதை பழக்கங்களுக்கு அடிமையானவர்கள் மட்டுமே பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவது போலவும் சித்தரிக்கப்படும். ஆனால் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் நன்றாக படித்த, சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் உள்ள இளைஞர்களும் ஈடுபடுவது பெரும் வருத்ததிற்குரியது. கண்டிக்கத்தக்கது. அதேபோல் மாணவர்களுக்கு நல்லொழுக்கத்தை கற்றுத்தரும் ஆசிரியர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது பெரும் வெட்கக்கேடானது.
இதையும் படிங்க: திமுக நிர்வாகி காரில் கடத்தி கொலை.. நில ஆக்கிரமிப்பை தட்டிக்கேட்டதால் விபரீதம்.. கள்ளக்காதலிக்காக கொலை செய்தது அம்பலம்..!
சமீபத்தில் கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி முகாமில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதும், அதே கிருஷ்ணகிரியில் 3 ஆசிரியர்களால் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது போன்ற செய்திகள் பெற்றோர் மனதில் இடியாய் விழுந்தது. இன்றும் +2 மாணவி பொதுத்தேர்வு எழுதும் போது பாலியல் தொல்லை அளித்ததாக ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இதேபோன்ற ஒரு சம்பவம் சென்னையில் அரங்கேறி உள்ளது. கல்லூரி ஒன்றில் படித்துக்கொண்டே பேராசிரியராக பணியாற்றும் மாணவி ஒருவருக்கு சக பேராசிரியர் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சென்னைக்கு அருகே இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான கல்லூரியில் கம்பியூட்டர் சயின்ஸ் பேராசிரியராக பணிபுரிந்து வந்தவர் சஞ்சு ராஜு. (வயது 36) இவர் அதே கல்லூரியில் படித்துக் கொண்டு பேராசிரியராக பணிபுரிந்து வரும் 27 வயதுடைய இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
தகவல் அறிந்த சக பெண் பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்த சஞ்சு ராஜீவை அடித்து வெளுத்து வாங்கியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த கல்லூரி மாணவர்கள் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் சஞ்சு ராஜீவிற்கு தர்மஅடி கொடுத்தனர். அவரை சிறைப்பிடித்து கேளம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்த போலீசார் கல்லூரி வளாகத்திற்கு சென்று பெண் பேராசிரியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சக பேராசிரியரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை அருகே தனியார் கல்லூரியில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை கல்லூரி மாணவர்கள் சரமாரியாகத் தாக்கி அவரை போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கோட்டூர்புரம் இரட்டை கொலை வழக்கு.. 12 பேர் கைது.. 3 பேருக்கு மாவுக்கட்டு.. சேலத்தில் பதுங்கியவர்களை தட்டிதூக்கிய போலீஸ்..!