×
 

இளைஞர்களுக்கான கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகளை எப்படி உருவாக்கப் போகிறீர்கள்? பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி..!

இளைஞர்களுக்கான கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகளை எப்படி உருவாக்கப் போகிறீர்கள் என பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இளைஞர்களுக்கான கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகளை எவ்வாறு பிரதமர் மோடி உருவாக்கப் போகிறார், ஓர் ஆண்டுக்கு முன் அறிவித்த வேலைவாய்ப்போடு கூடிய ஊக்கத் திட்டம் என்ன ஆயிற்று என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில் “2024 மக்களவைத் தேர்தலுக்குப்பின் பிரதமர் மோடி ஊக்கத்தொகை அடிப்படையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டத்தை அறிமுகம் செய்தார். இந்தத் திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகம் செய்து ஏறக்குறைய ஓர் ஆண்டாகிவிட்டது, ஆனால், இந்தத் திட்டம் குறித்த விளக்கம் அரசிடம் இருந்து இல்லை. இந்தத் திட்டத்துக்காக ரூ.10ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. இதன் மூலம் நாட்டில் வேலையின்மை குறித்து பிரதமர் மோடி அக்கறையில்லாமல் இருக்கிறது என்பது தெரிகிறது.

இதையும் படிங்க: இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகே - பிரதமர் மோடி சந்திப்பு.. முதன்முறையாக ராணுவ ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு..!

பிரதமர் மோடி நாள்தோறும் புதிய ஸ்லோகங்களை கண்டுபிடிக்கிறார். ஆனால் இளைஞர்கள் உண்மையான வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள். இளைஞர்களுக்கு கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்க உங்களிடம் நிலையான திட்டம் என்ன இருக்கிறது, அல்லது இதுவும் வெறும் வெற்று வார்த்தைதானா. 

மிகப்பெரிய கார்ப்பரேட்களையும், ஒட்டுண்ணி முதலாளிகளையும் மட்டும் கவனத்துவந்தால், வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியாது. உற்பத்திக்கு முக்கியத்துவம் இல்லை ஒன்றுகூடலுக்கு மட்டுமே முக்கியத்துவம் இது இந்தியாவின் சுயத்திறனை குறைத்துவிடும். கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகளை போட்டி இருக்கும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களில்தான் உருவாக்குவதுதான் வழி, போட்டி இருக்கும் நியாயமான சந்தைகளில் பெரிய அளவிலான முதலீடு, உள்நாட்டு உற்பத்தி ஆதரவு மற்றும் சரியான திறன்களைக் கொண்ட இளைஞர்கள் கண்டறிதல் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்கலாம்.

பிரதமர் எப்போது தனது கவனத்தை அதானி மற்றும் அவரது கோடீஸ்வர நண்பர்களை வளப்படுத்துவதில் இருந்து விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் சமமான வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்யும் விஷயத்துக்கு எப்போது திருப்புவார்
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

பாஜக செய்தித்தொடர்பாளர் அமித் மாளவியா எக்ஸ் தளத்தில் ராகுல் காந்திக்கு அளித்த பதிலில் “ராகுல் காந்தி அணியினர் உண்மையான தகவல்களை கூறுவதில் முழுவதும் தோல்வி அடைந்துவிட்டனர். 2004 முதல் 2014 வரை 2.90 கோடி வேலைவாய்ப்புகளை காங்கிரஸ் அரசு உருவாக்கியது. ஆனால், 2014-முதல் 2024 வரை பாஜக அரசு 17.19 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 4.60 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இலங்கை சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு.. குழந்தையை தூக்கி கொஞ்சி குழந்தையாக மாறிய மோடி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share