×
 

பாமக- தவெக கூட்டணிக்கு ராமதாஸ் வைத்த டிமாண்ட்.. இ.பி.எஸை தெறிக்க விட்ட விஜய், அன்புமணிக்கு அடங்குவாரா..?

இரண்டரை ஆண்டுகள் விஜய், அடுத்த இரண்டரை ஆண்டுகள் அன்புமணி முதல்வராக இருக்க ஒப்பந்தம் போடுவதற்கு விஜய் தயாரா? எனக் கேட்டுள்ளார்.

தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் அரசியல் களம் தற்போதே சூடுபிடித்து வருகிறது. 

கருணாநிதி, ஜெயலலிதா காலத்தில் நடந்த தேர்தல்களில் வட மாவட்டங்களில் அதிமுக - திமுக கட்சிகளுடன், பாமக மாறி மாறி கூட்டணி வைத்து பலனை அனுபவித்து வந்தது. அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில், பாமக சந்தித்த அனைத்து தேர்தலிலும் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில், தோல்விகளில் இருந்து மீள வேண்டும் எனக் கருதுகிறார் ராமதாஸ். விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சி போட்டியிட்டும், இரண்டாம் இடத்தை பாமக உறுதி செய்தது. வட மாவட்டங்களில் உள்ள, 20 மக்களவை தொகுதிகள், 120 சட்டசபை தொகுதிகளில் பாமகவை பலப்படுத்தி வெற்றி பெற்றால், முதல்வர் பதவி அன்புமணிக்கே கிடைக்கும். அந்த அடிப்படையில் தேர்தல் கூட்டணியை அமைக்க தனக்கு நெருக்கமான நண்பர்களை தைலாபுரம் தோட்டத்திற்கு அழைத்து ராமதாஸ் வியூகம் அமைத்து வருவதாகக் கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: வன்னியர் சங்க மாநாட்டிற்கு திருமாவுக்கு நேரில் அழைப்பு... ராமதாஸ் போடும் அரசியல் கணக்கு - பின்னணி என்ன?

இதற்கிடையில், மாமல்லபுரம், சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா அன்புமணி தலைமையில் நடக்க இருக்கிறது. மாநாட்டில் 10 லட்சம் பேர் பங்கேற்க வேண்டும். மாநாட்டின் வெற்றியை தொடர்ந்து கூட்டணி பேச திமுக - அதிமுக - தவெக கட்சிகள் தங்களை நாடி போட்டிபோட்டு வர வேண்டும் என விரும்புகிறாராம் ராமதாஸ்.

 

தவெக தலைவர் விஜய்க்கு நெருக்கமான ஆடிட்டர் ஒருவர், சமீபத்தில் ராமதாசை சந்தித்துப் பேசியுள்ளார். சட்டமன்றத் தேர்தலில் பாமகவுக்கு 90 தொகுதிகள், மீதமுள்ள 144 தொகுதிகளில், தவெக மற்றும் சில கட்சிகள், கூட்டணி அமைத்து போட்டியிடலாம் என ஆடிட்டர் தெரிவித்துள்ளார். அதற்கு ராமதாஸோ 'சினிமாவில் விஜய் உச்ச நட்சத்திரம் என்பதும், அவர் படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றதும் தெரியும். அரசியலில் அவரது வெற்றியை இன்னும் பார்க்கவில்லை.

விஜய் கட்சி துவக்கியதும் அன்புமணி வாழ்த்து தெரிவித்தார். நாங்கள் விஜயை இதுவரை விமர்சிக்கவே இல்லை. வன்னியர் சமுதாய இளைஞர்களும் விஜய் ரசிகர்களாக உள்ளனர். அவர்கள் எல்லாம் முதல்வர் வேட்பாளராக அன்புமணியை விரும்புவர். எனவே, இரண்டரை ஆண்டுகள் விஜய், அடுத்த இரண்டரை ஆண்டுகள் அன்புமணி முதல்வராக இருக்க ஒப்பந்தம் போடுவதற்கு விஜய் தயாரா? எனக் கேட்டுள்ளார்.

அதற்கு ஆடிட்டர் தரப்பில், துணை முதல்வர், அமைச்சர் பதவியை அன்புமணிக்கு வழங்கலாம். முதல்வர் பதவியை பங்கு போடுவது குறித்து, விஜய்தான் முடிவு செய்ய வேண்டும்' என பதில் அளித்துள்ளார். சந்தேகங்கள் அனைத்துக்கும் தெளிவான பதில் பெற்று வாருங்கள். கூட்டணி குறித்து பேசி முடிவெடுக்கலாம் என, விஜய் தரப்பு ஆடிட்டரிடம் ராமதாஸ் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆகப்பெரும் கட்சியான அதிமுகவிடமே இந்தக் கணக்குகளுக்காக முரண்டு பிடித்த விஜய் தரப்பு அன்புமணிக்கு பதவி கொடுக்க முன்வந்து பாமகவுடன் கூட்டணி அமைக்குமா என்பது  சந்தேகமே..!

இதையும் படிங்க: பாமக சித்திரை முழு நிலவு மாநாடு..! திருமாவளவனுக்கு அழைப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share