நேருவின் சாதனையை மோடி முறியடிப்பார்! ராம்தாஸ் அத்வாலே போட்ட கணக்கு…
பிரதமர் மோடி ஜவகர்லால் நேருவின் சாதனையை முறியடித்து, தொடர்ந்து 4-வது முறையாக ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வார் என ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.
1950 ஆம் ஆண்டு பிறந்த நரேந்திர மோடி, எட்டு வயதிலேயே ஆர்.எஸ்.எஸ் என அழைக்கப்படும் தேசிய தொண்டர் அணியில் உறுப்பினராக தன்னை இணைத்துக்கொண்டவர். மேலும், அரசியலில் அதிகம் ஆர்வம் கொண்டவராக விளங்கினார். இந்தியாவில் நெருக்கடிநிலை அமலில் இருந்தபோது பல போராட்டங்களில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்ட அவருக்கு, பல அரசியல் தலைவர்களின் அறிமுகம் கிடைத்தது.
பல்வேறு பொறுப்புகளை வகித்து, பின்னர் முதலமைச்சராக பொறுப்பேற்று திறம்பட செயல்பட்டார். அதனை தொடர்ந்து, மோடி மே 26, 2014 அன்று முதல் முறையாக இந்தியாவின் 16-வது பிரதமராக பதவி ஏற்றார். தற்போது 3வது முறையாக பிரதமராக பதவி வகித்து வருகிறார். இதனிடையே, 4வது முறையும் ஆட்சியை தக்கவைத்து, நேருவின் சாதனையை பிரதமர் மோடி முரியடிப்பார் என ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி ‘ரொம்ப ஸ்மார்ட்’..! பரஸ்பர வரி சிறப்பாக செயல்படும்: அதிபர் ட்ரம்ப் புகழாரம்..!
இந்திய குடியரசுக் கட்சி தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே பீகாரில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தில் நிதிஷ்குமாரை அவர் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அத்வாலே ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக கூறினார். ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் - ஐ விட நிதிஷ்குமார் நிச்சயமாக ஆரோக்கியமானவர் என்றும் இருவருடனும் தான் நண்பர்களாக இருந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
பீகாரில் தனது கட்சி வலுவாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணிக்காக பிரசாரம் செய்வேன் என உறுதி அளித்தார். தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடி ஜவகர்லால் நேருவின் சாதனையை முறியடித்து, தொடர்ந்து 4-வது முறையாக ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வார் என்று கூறினார்.
மேலும் ஊழல் இல்லாத அரசாங்கத்தை நடத்தி வரும் மோடி தலைமையிலான குழுவில் தான் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமைப்படுவதாகவும், அவரது ஆட்சிக் காலத்தில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறுவதற்கான பாதையில் இருப்பதகாவும் தெரிவித்தார்.
தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்கு திரும்பியதன் மூலம் மோடி ஏற்கனவே நேருவின் சாதனையை சமன் செய்துள்ள நிலையில், அவர் நேருவின் சாதனையை முறியடித்து நான்காவது முறையாக ஆட்சியை அனுபவிப்பார் என நம்புவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: அமலாக்கத் துறைக்கு க்ளீன் ஷீட் கொடுத்த பிரதமர் ! 22 ஆயிரம் கோடி பணத்தை மீட்டு பெருமிதம்