×
 

பஸ்ஸில் மாணவர்களை வெளுத்தெடுத்த ரஞ்சனா பாஜகவில் இருந்து விலகல்.! ஹிந்திக்கு கடும் எதிர்ப்பு

பிரபல தொலைக்காட்சி மற்றும் சினிமா நடிகை ரஞ்சனா நாச்சியார் பாஜகவில் இருந்து திடீரென அதிரடியாக விலகி உள்ளார்.

பிரபல தொலைக்காட்சி மற்றும் சினிமா நடிகையையும், ராமநாதபுரம் சமஸ்தானத்தின் உறவுக்கார பெண்ணுமான ரஞ்சனா நாச்சியார் பாஜகவில் இருந்து திடீரென அதிரடியாக விலகி உள்ளார்.

பாஜகவின் கலை இலக்கிய பிரிவில் மாநில நிர்வாகியாக பணியாற்றி வந்த ரஞ்சன நாச்சியாரின் திடீர் விலகல் பாஜக கட்சியினரிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக திமுக மற்றும் பாஜக கட்சிகளிடையே மும்மொழி கொள்கை தொடர்பாக கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது. இதில் கெட் அவுட் மோடியில் ஆரம்பித்து கெட் அவுட் ஸ்டாலின் வரை சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் செய்யப்பட்டு தற்போது ஈகோ பிரச்சினையாக மாறிப்போனது.

இதையும் படிங்க: இன்று தமிழகம் வருகிறார் அமித்ஷா..! போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கோவை மாநகரம்.!

இது மட்டுமில்லாமல் ஆங்காங்கே போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.  ஹிந்தியில் உள்ள எழுத்துக்களை கறுப்பு மையிட்டு அழிக்கும் போராட்டங்கள் என பல விதங்களில் தங்களது எதிர்ப்பை திமுகவினர் தெரிவித்து வருகின்றனர்.
 
திமுகவினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜகவினரும் திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தி தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகள் கற்பிக்கப்படுவதை ஆதாரத்தோடு எடுத்து போட்டு சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் தான் பாஜகவின் மாநில நிர்வாகியாக இருக்கும் கலை இலக்கியப் பிரிவு மாநில பொறுப்பாளர் ரஞ்சனா நாச்சியார் கட்சியிலிருந்து நான் விலகுகிறேன் ஹிந்தி எதிர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து விலகுவதாக தெரிவித்ததுள்ளார். இந்த அறிவிப்பு பாஜக தொண்டர்களிடைய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பாஜக அரசின் ஹிந்தி திணிப்பு சரியான நடவடிக்கை அல்ல என கூறி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் ரஞ்சனா நாச்சியார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை மாற்றந்தாய் மனப்பான்மையுடன் பார்க்கும் பாஜகவை ஒரு தமிழச்சியாக ஏற்க முடியவில்லை எனவும் ரஞ்சனா நாச்சியார் வேதனை தெரிவித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு சென்னை குன்றத்தூர் பகுதியில் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு சென்ற பள்ளி மாணவர்களை பேருந்தை நிறுத்தி அடித்து விரட்டினார். மேலும் அங்கு பணியிலிருந்த கண்டக்டர், டிரைவர் ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து தமிழக போலீசாரால் ரஞ்சனா நாச்சியார் மாணவர்களை அடித்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அந்த சம்பவத்திலிருந்து நீண்ட நாட்களாக எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காமல் இருந்த ரஞ்சனா நாச்சியார் தற்போது பாஜகவில் இருந்து விலகுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ED, income tax, போர்டுல கருப்பு பெயிண்ட் அடிக்க சொல்லுங்க பார்க்கலாம்..! திமுக மீது அண்ணாமலை அட்டாக்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share