கொஞ்சமாவது படிங்க விஜய்..! சட்டம் தெரியாத அரசியல் தற்குறிகள்… கிழித்தெடுத்த ஹெச்.ராஜா..!
சோழன் கட்டின ஹிந்து கோவில் சிவன் கோவில் சந்திரசேகர சுவாமி கோவில். அதை வஃக்பு சொத்து என்றார்கள். அதுக்கு அப்புறம்தான் நான் போராட்டம் செய்து அதை தடுத்தேன்.
''இஸ்லாமியர்களில் ஓவைசி போன்ற 100 பேர் மட்டும்தான் 12 லட்சத்து 40 ஆயிரம் ஏக்கரையும் ஆக்கிரமித்து அவர்கள் சுயநலத்துக்கு பயன்படுத்துகிறார்கள்'' என பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.
நடிகர் விஜய் கொஞ்சமாவது சட்டங்களை, விதிகளை படிச்சிட்டு வாங்க சார். நான் இந்த பிரச்சனை வந்ததுக்கு முதல் காரணமே திருச்சிக்கு பக்கத்தில் இருக்கின்ற திருச்செந்தூரையில் சோழன் கட்டின ஹிந்து கோவில் சிவன் கோவில் சந்திரசேகர சுவாமி கோவில். அதை வஃக்பு சொத்து என்றார்கள். அதுக்கு அப்புறம்தான் நான் போராட்டம் செய்து அதை தடுத்தேன். கிரன் ரிஜிஜூ, உள்துறை அமைச்சர் அவர்களுக்கும் இந்த விவகாரத்தை அனுப்பி வைத்தேன்.
நான் கேட்கிறேன்… இந்த வஃக்பு மசோதா முஸ்லிம்களுக்கு எதிர் இருக்கிறது என்கிறார்கள். என்ன எதிராக இருக்கிறது? எங்கே எதிராக இருக்கிறது? எல்லா இடங்களிலும் தமிழ்நாட்டில் 53 ஆயிரத்து 834 சொத்துக்கள் இந்துக்களுடைய கோவில்கள், இந்துக்கள் வீடுகள், இந்துக்கள் நிலம் அபகரிக்கப்பட்டிருக்கிறது. 2 வன்னியர் பெரியவர்கள் நீதிமன்றத்தின் மூலமாக பெற்ற இடம் 96 ஏக்கர்ல 1000 பட்டியல் சமுதாய மக்கள் முத்தரையர் சமுதாய மக்கள் குடியிருக்காங்க
இதையும் படிங்க: பொய் வாக்குறுதி... மக்களை ஏமாற்றுவதில் பாஜக- திமுக இரட்டைக் குழல் துப்பாக்கி: விஜய் கடும் எச்சரிக்கை..!
நம்ம கொண்டு வந்திருக்கிற வஃக்பு மசோதாவுல என்ன முஸ்லிம்களுக்கு எதிரா இருக்கு? அதை சொல்லுங்க. அவருக்கு புஸ்ஸீயா..? பசியானு தெரியல… அவருக்கெல்லாம் என்ன தெரியும். அவருக்கெல்லாம் சப்போர்ட் கொடுப்பதெ இந்த மீடியாக்கள்தான். ஆதித்த கரிகாலன் ஆம்பூர் பக்கத்துல ராணிப்பேட்டை பக்கத்துல வேப்பூர். அங்க போனா 1933 ல் 2 வன்னியர் பெரியவர்கள் 96 ஏக்கர் கோயிலுக்கு எழுதி வைத்த சொத்தை இஸ்லாமியர்கள் அபகரித்து வைத்திருந்தார்கள். இப்படி இஸ்லாமிய சமுதாயம் கொள்ளை அடிக்கிறாங்க.
ஓவைசி போன்ற 100 பேர் மட்டும்தான் 12 லட்சத்து 40 ஆயிரம் ஏக்கரையும் ஆக்கிரமித்து அவர்கள் சுயநலத்துக்கு பயன்படுத்துகிறார்கள். நாடாளுமன்றத்தில் பாஜகவினர் பேசும்போதே சொன்னாங்க. எங்கேயாவது முஸ்லிம் விதவைகள், முஸ்லிம் ஏழைகள், முஸ்லிம் அனாதைகளுக்கு ஏதாவது நீங்க சோசியல் சர்வீஸ் இந்த சட்டத்தை பயன்படுத்தி செய்திருக்கிறார்களா? இதைப் பற்றி தெரியாத அரசியல் தற்குறிகள்தான் இந்த சட்டத்தை எதிர்க்கும். அந்த தற்குறிகளில் எங்கள் ஊரைச் சேர்ந்த சிதம்பரமும் இருக்கிறார் என்பதுதான் துரதிஷ்டமான விஷயம்'' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எம்.எல்.ஏ சீட்டுக்கு பணம்...! எங்கே எங்களின் உழைப்பு..? விஜய்க்கு பறந்த கடிதம்..!