×
 

மோசமான நிலையில் எல் சால்வடார் சிறை... டிரம்பால் நிரம்பி வழியும் கைதிகள்!!

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு நாடுகடத்தப்பட்டவர்கள் குறித்த வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற நாள் முதல் அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதில் குறிப்பாக சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருப்பவர்களை நாடு கடத்தினார். அதில் இந்தியர்கள் 300க்கும் அதிகமானோர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இதனிடயே டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க நீதிமன்றம் தற்காலிக தடை விதித்தது. இருந்தபோதிலும் டிரம்ப் நாடு கடத்துவதை நிறுத்தவில்லை என கூறப்படுகிறது. சட்டவிரோதமாக நாட்டில் குடியேறியவர்களை நாடு கடத்த ஏலியன் எனிமி சட்டத்தைப் பயன்படுத்த உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் வெனிசுலா நாட்டை சேர்ந்த கேங் உறுப்பினர்கள் (ரவுடிகளை போல) எல் சால்வடார் நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் அமெரிக்காவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த வெனிசுலாவை சேர்ந்த கேங் உறுப்பினர்கள் அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்பட்டு உயர் பாதுகாப்பு சால்வடார் சிறையில் தான் அடைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் கிறிஸ்டி நோயம், எல் சால்வடார் சிறைக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

இதையும் படிங்க: டிரம்ப் செய்த மோசமான செயல்... தவிக்கும் பிள்ளைகள்!!

மேலும் அங்கிருந்த ஆயுதக் கிடங்கு மற்றும் தனிமைப்படுத்தும் பிரிவையும் பார்வையிட்டார். அப்போது கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறையை சுற்றிப் பார்த்தார். மேலும் அதற்கு முன்பு நின்று கொண்டு வீடியோவை ஒன்றையும் கிறிஸ்டி நோயம் வெளியிட்டார். அந்த வீடியோவில், சிறை அறையில் இருந்து கைதிகள் வெளியே வரும் போது அவர்களின் கைகளும் கால்களும் கட்டப்படுகிறது. இதனால் அவர்களால் நிமிர்ந்து நடக்கக் கூட முடிவதில்லை. மாஸ்க் அணிந்து கொண்டு இருக்கும் இரு சிறை அதிகாரிகள் அவர்களை தரதரவென இழுத்துச் செல்கிறார்கள்.

மேலும், சிறையில் மொத்தமாகவும் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கிறிஸ்டி நோயம், அங்கிருந்த பதிவு செய்த வீடியோவில்,  புலம்பெயர்ந்த ஒருவர் குற்றம் செய்தால் நினைத்துக் கூட பார்க்க முடியாத விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும். முதலில், எங்கள் நாட்டிற்குச் சட்டவிரோதமாக வராதீர்கள். அப்படி வந்தால் உங்களை நாடு கடத்துவோம்.. வழக்கு தொடர்வோம்.! ஆனால், இது அமெரிக்க மக்கள் குறிவைத்து குற்றம் செய்வோரை அடைத்து வைக்க நாங்கள் பயன்படுத்தும் சிறை என்றார். மனித உரிமை ஆர்வலர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கூடுதல் சம்பளம் தரும் டொனால்ட் டிரம்ப்? சுனிதா வில்லியம்ஸ், வில்மோருக்கு எவ்வளவு கிடைக்கும்?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share