விஜயலட்சுமிக்கு மாதம் ரூ.50,000 கொடுத்தது உண்மையா? - முதல் முறையாக உண்மையை பேசிய சீமான்...!
நடிகை விஜயலட்சுமிக்கு மாதம் ரூ.50,000 ஆயிரம் கொடுத்தது உண்மையா? என்ற கேள்விக்கு சீமானே விளக்கம் கொடுத்துள்ளார்.
நடிகை விஜயலட்சுமிக்கு மாதம் ரூ.50,000 ஆயிரம் கொடுத்தது உண்மையா? என்ற கேள்விக்கு சீமானே விளக்கம் கொடுத்துள்ளார்.
சீமான் திமுகவின் தூண்டுதலால் தான் பேசி வருவதாக கூறியதற்கு, நேற்று விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், திமுக ஒன்னும் உங்கள வந்து போன வருஷம் விஜயலட்சுமிக்கு 50,000 கொடுத்து இந்த மாதிரி கேவலப்பட்டு வேலை எல்லாம் பண்ணு அப்படின்னு சொல்லல. ஏன் அவங்கள சும்மா வம்புக்கு இழுக்குறீங்க. அப்பறம் இன்னொரு விஷயம் சொன்னீங்களாம் “அந்த பொம்பளையை கொஞ்சம் நேர்ல வர சொல்லுங்க நான் உட்கார்ந்து பேசுறேன்” அப்படின்னு நான் காத்துட்டு இருக்கேன் சீமான் உங்களை நேர்ல பார்த்து என்னைய பார்த்தா உனக்கு எப்படிடா தெரியுது அப்படின்னு கேட்கனுன்னு தான் இருக்கேன்” எனத் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக இன்று தருமபுரியில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், சாகப்போகிறேன், சாகப்போகிறேன் என வீடியோ வெளியிட்டார். அதைப் பார்த்த எனது தம்பி ஒருவர் வந்து பாவம் உதவி செய்யுங்கள் எனக்கூறினார். அந்த நபரிடமும் அவர் உதவி செய்யும் படி கேட்டுள்ளார். அதனால் தான் மாதம் 50 ஆயிரம் ரூபாய் என ஒரு இரண்டு - மூன்று மாதத்திற்கு கொடுத்து உதவினேன். உதவி என யாராவது கேட்டால் செய்து தானே ஆக வேண்டும். போய் தொலையட்டும் எனக்கொடுத்தேன். அதுக்கு எனக்கும் எந்த தொடர்பும் இல்லை எனக்கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கருணாநிதி மகனா.. பிரபாகரன் மகனா என பார்ப்போம்..! முதல்வர் ஸ்டாலினுக்கு சீமான் சவால்..!
மேலும், “திருமணம் ஆகிவிட்டது, ஏழு முறை கர்ப்பம் கலைந்தது என்று விஜயலட்சுமி கூறுகிறார்கள். ஒரே ஆண்டில் ஏழு முறை கருவை கலைத்த நபர் நானாகத்தான் இருக்க முடியும். அதுவும் சிறையில் இருந்து கொண்டு கருவை கலைத்தவன் நானாக தான் இருக்க முடியும் கிண்டலாக பேசினர். விஜயலட்சுமி உதவி என்று கேட்டபோது உதவி செய்தோம். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் வருகிறது அதிகாரம் உங்களுக்கானது அல்ல, மனதில் வைத்து ஆட்டத்தை ஆடுங்கள்” என்றும் திமுகவை எச்சரிக்கும் வகையில் பேசியுள்ளார்.
இதையும் படிங்க: நான் ஓடி ஒளியவில்லை, தலைமறைவாகவில்லை... இன்று மாலை ஆஜராவேன்.. சீமான் ஆவேசம்...!