×
 

சீமான் மீதான தொடர் அதிருப்தி! நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய முக்கிய நிர்வாகி!

நாம் தமிழர் கட்சியின் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் பாவேந்தன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் செயல்பாடுகளில் அதிருப்தி தெரிவித்து அக்கட்சியின் முக்கிய பொறுப்புகளில் அங்கம் வகித்து வந்த நிர்வாகிகள் விலகுவது தொடர் கதையாகி வருகிறது. சமீபத்தில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகியாக செயல்பட்டு வந்த காளியம்மாள் விலகுவதாக அறிவித்தார். இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளரான பாவேந்தன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

பெரியாரை விமர்சித்து தமிழ்த் தேசியத்திற்கு எதிராக பெரியாரை முன்னிறுத்துவது தமிழ்நாட்டு மக்களுக்கு ஆபத்தாக முடியும் என வழக்கறிஞர் பாவேந்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், நாம் தமிழர் கட்சியில் பயணித்தபோது அனைத்து களப்பணிகளை வழி நடத்தியதோடு உண்மையும் நேர்மையுமாக நின்று கட்சிக்கு வலுச்சேர்த்து வாக்கு சேகரித்ததாகவும், அதில் பெரியார் உணர்வாளர்களுடைய வாக்குகளும் அடங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தூக்கி அடித்தார் காளியம்மாள்..! நாம் தமிழர் கட்சியிலிருந்து அதிரடியாக விலகல்..!

2021-ல் சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக, மாற்று அரசியலை முன்வைத்து கொள்கை வென்றிடத் தேர்தல் களத்தில் பணியாற்றியதாகவும், இதனால், இரண்டு தேர்தல்களில் போட்டியிட்டு பெரும் பொருளாதாரத்தை இலட்சக்கணக்கில் இழந்தபோதும், தான் சீமானுடன் உறுதியாகப் பயணித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

 ஆனால் அவர் கொள்கைக்கு முரணாக முன்னுக்குபின் பேசுவது ஏற்ப்புடையது அல்ல என்று தெரிவித்துள்ளார். பெரியாரை விமர்சித்து, தமிழ்த்தேசியத்திற்கு எதிராகப் பெரியாரை முன் நிறுத்துவது, தமிழர் நிலத்தின் மக்களுக்கே, பேராபத்தாக முடியும்.,அது மட்டுமின்றி,தமிழ்த் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களையும், பெரியார் அவர்களையும் எதிரெதிராக நிற்க வைப்பது தமிழ்த்தேசிய அரசியலுக்கெதிரான, பாசிச பாஜக-விற்கும், சங்பரிவார்களுக்கும், விருந்தாக அமையும் என்றும் கூறியுள்ளார்.

கட்சியை வீழ்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் தங்களின் இத்தகையான செயல்பாடுகளை விரும்பாத காரணத்தால், நாம் தமிழர் கட்சியில் தான் வகித்து வந்த, இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விலகிக்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தவெகவில் இணைய போராடும் காளியம்மாள்... தடைபோடும் நபர்.... என்னதான் நடக்கிறது?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share