×
 

'பீடை பாபு...' உன்னை சிறையில் வைக்காமல் இந்த சனி ஓயாது.. சேகர் பாபுவை சிதைத்த ஹெச். ராஜா.!

ஒவ்வொருவரையும் தூக்கி சிறையில் அடைக்கும் பாரதிய ஜனதா கட்சி, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு. என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்?

''அறநிலையத்துறையை கொள்ளையடிக்கும் சேகர் பாபுவை சிறையிலே வைக்காமல் இந்த சனி ஓயாது'' என பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா ஆவேசமாகக் கூறி உள்ளார். 

திருச்சியில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பேசிய அவர், ''நண்பர்களே இந்த கூட்டத்திற்கு, மத்தியில் ஆளுகின்ற பாரதிய ஜனதா கட்சி இங்கு இருக்கின்ற ஒரு பாசிச திராவிடியன் ஸ்டாக் ஆட்சியின் காரணமாக நாம கோர்ட்டுக்கு போய் அனுமதி வாங்குவதா? என்னைய்யா நடக்கிறது? பேய்கள் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாஸ்திரங்கள்…  பிணம் தின்னும் சாஸ்திரங்கள்….  இங்கு என்ன ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது? ஊழலிலே ஊறித் திளைத்துப் போன ஒரு அரசாங்கம், ஊழலால் மூழ்கிக் கொண்டிருக்கின்ற இந்த திராவிடியன் ஸ்டாக் ஆட்சி…

இன்னும் நீங்கள் இருக்கப் போவது 13 மாதங்கள்தான் என்று நான் எச்சரிக்க விரும்புகிறேன். அதன் பிறகு ஒவ்வொருவரையும் தூக்கி சிறையில் அடைக்கும் பாரதிய ஜனதா கட்சி, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு. என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்? மத்தியில் ஆட்சி செய்யும் கட்சி அதனுடைய கருத்தை மக்களிடம் சொல்ல முடியாமல்... அந்த அளவுக்கு அகங்காரமா உங்களுக்கு? ஆணவமா? அவர் யாரு…? அது பீடையா..? ஆமாம் பீடை பாபு (சேகர் பாபு) என்னை ஏழரை என்கிறான். நான் சனிதான். அறநிலையத்துறையை கொள்ளையடிக்கும் சேகர் பாபுவை சிறையிலே வைக்காமல் இந்த சனி ஓயாது'' என ஆவேசமாகப் பேசினார்.

இதையும் படிங்க: உடலைக் கொடுக்க மிரட்டல்: வற்புறுத்தி கடிதம் வாங்கிய சேகர் பாபு..? அடித்துச் சொல்லும் அண்ணாமலை..!

முன்னதாக ஒரு விழாவில் பேசிய ஹெச்.ராஜா, ''திருவண்ணாமலையில் கரிகாலன் என்ற ஒருவர் இருக்கிறார். திருமாவளவன் என்ன சொன்னாலும் இவர் சர்வநாசம் செய்து விடுவார். ஆனால், தற்பொழுது இவர் சாமியாராக இருக்கிறார். திருமாவளவன் சமூகத்திற்காக அரசியலுக்கு வந்தார் என்பதால் அவருடன் இருந்தேன். ஆனால், அரசியலுக்கு வந்து அவர் பிழைப்பு நடத்த ஆரம்பித்து விட்டதால் நான் சந்நியாசி ஆகி விட்டேன் என்கிறார் கரிகாலன். செருப்பு தைப்பது முதல் அனைத்து தொழில்களையும் ஒருவனே செய்வதால் வேலையில்லா திண்டாட்டம் உருவாகிவிட்டதாக திருமாவளவனின் அடியாளாக இருந்த கரிகாலன் கூறி இருக்கிறார்.

சாதி ஆணவ படுகொடுலைகளுக்கு காரணம், திருமாவளவனும், சுப. வீரபாண்டியனும்தான். சாதிய ஆணவக் கொலைகளை சுப.வீரபாண்டியனும், திருமாவளவனும் தூண்டி விடுகின்றனர். திருமாவளவனும், சுப.வீரபாண்டியனும் பிறக்கும் முன் சாதிமறுப்பு திருமணங்கள் நடந்தன. இவர்கள் பிறக்கும் முன் யாரும் அரிவாள் எடுக்கவில்லை. இவர்கள் பிறந்த பின்புதான் அரிவாள் எடுக்கிறார்கள்” என ஆவேசமாக பேசினார். 

இதையும் படிங்க: சேகர்பாபு அண்ணா… இதுக்கு என்ன ஸ்கிரிப்ட் வைச்சிருக்கீங்க..? காண்டாக்கும் அண்ணாமலை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share