×
 

'அந்த என்கவுண்டர்... ஆம்ஸ்ட்ராங் கொலையில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு..?' - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு

ஒருவேளை இந்த தாக்குதல் நடந்த போது நான் வீட்டில் இருந்திருந்தால் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும். இதன் காரணமாக என் மீது பொய் வழக்கு போட்டு கடந்த நான்கு ஆண்டுகளாக என்னை அலைக்கழித்தார்கள்.

''ஆம்ஸ்ட்ராங்கிலன் கொலை வழக்கில் இருந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையை  காப்பாற்றுவதற்காக தான் கமிஷனராக பொறுப்பேற்ற மூன்று நாட்களில் அருண், திருவேங்கடத்தை என்கவுண்டர் செய்தார்'' என பரபரப்பை கிளப்பியுள்ளார் யூடியூபர் சவுக்கு சங்கர்.

 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வபெருந்தகைக்கு தொடர்பு இருக்கிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்கு நேரடியாக தொடர்பு இருப்பதை அறிந்தவர் அந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான திருவேங்கடம். திருவேங்கடம் எங்கே இந்த விஷயத்தை வெளியே சொல்லிவிட போகிறாரோ என்பதற்காக செல்வப்பெருந்தகையை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இருந்து காப்பாற்றுவதற்காகத்தான் திருவேங்கடத்தை கமிஷனர் அருண் பொறுப்பேற்ற மூன்று நாட்களில் என்கவுண்டர் செய்தார்.

இப்போதும் செல்வப்பெருந்தகையை காப்பாற்றுவதற்காகத்தான் என் மீது அந்த சுத்திகரிப்பு தொழிலாளர்களை தூண்டி விட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர். இன்று காலை என் வீட்டில் நடந்த இந்த தாக்குதலின் பின்னணியில் செல்வப்பெருந்தகையும் இருக்கிறார். சென்னை மாநகர காவல் ஆணையாளர் அருண் அவர்களும் இருக்கிறார். என் வீட்டில் நடந்த தாக்குதலுக்கு சென்னை மாநகர காவல் ஆணையாளர் அருண் எப்படி பொறுப்பாக முடியும் என்று நீங்கள் கேட்கலாம்.

இதையும் படிங்க: இதுக்கா கருப்பு கொடி காட்டுவீங்க? இதுக்கு மட்டும் பாஜக போராடுமா..? கருப்பு கொடியால் கடுப்பான செல்வப்பெருந்தகை..!

நான் இந்த புதிய வீட்டிற்கு குடிபோய் மூன்று மாதங்கள் தான் ஆகிறது. இந்த வீட்டின் முகவரியை நான் எந்த இடத்திலும் பதிவு செய்யவில்லை. அப்படி இருக்கையில் நன்றாக திட்டமிட்டு என்னுடைய புகைப்படங்களை பதாகைகளாக தயார் செய்து இரண்டு பேருந்துகளில் சுத்திகரிப்பு தொழிலாளர்களை அழைத்து வந்து என் வீடு இந்த இடத்தில்தான் இருக்கிறது என்ற தகவலை காவல்துறையை தவிர்த்து வேறு யாரும் அவர்களுக்கு கொடுத்திருக்க முடியாது.

மேலும் என் வீட்டில் இன்று காலை 10 மணிக்கு தாக்குதல் நடப்பதற்கு முன்பாக வாணி ஸ்ரீ விஜயகுமார் என்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் ஆதரவாளராக இருக்கக்கூடிய ஒரு வழக்கறிஞர் சுத்திகரிப்பு தொழிலாளர்கள் என்று அழைக்கப்படுபவர்களை கூட்டி வந்து சென்னை மாநகர சாலையிலே ஊர்வலமாக செல்கிறார். ஊர்வலமாக வந்த பிறகுதான் என் வீட்டில் தாக்குதல் நடைபெற்றது. காவல்துறை நினைத்திருந்தால் ஒரு நிமிடத்தில் இந்த தாக்குதலை தடுத்திருக்க முடியும்.

சென்னை மாநகர காவல் துறைக்கு என்று தனியாக உளவு பிரிவு இருக்கிறது. அந்த உளவு பிரிவின் வேலை இது போன்ற குற்றங்கள் நடைபெறாமல் முன்கூட்டியே தடுப்பதுதான். ஒரு வழக்கறிஞர் கிட்டத்தட்ட 50 சுத்திகரிப்பு தொழிலாளர்களை யூனிபார்ம் போட்டுக் கொண்டு சென்னை வீதிகளில் ஊர்வலமாக அழைத்து வந்து வீட்டில் தாக்குதல் நடத்துகிறார் என்றால், இதுகூட தெரியாத உளவுத்துறை என்ன உளவுத்துறை என்பது எனக்கு தெரியவில்லை.

இந்த காரணங்களின் அடிப்படையில்தான் சென்னை மாநகர ஆணையாளர் அருள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் தூண்டுதலின் பேரில் இந்த தாக்குதல் என் மீது நடைபெற்று இருக்கிறது. மதுரவாயலில் நான் குடியிருந்த வீடு கடந்த மே மாதம் காவல்துறையால் சீல் வைக்கப்பட்டு குடியிருக்க வீடு இல்லாமல் நான் சில மாதங்கள் ஹோட்டலில் தங்கி இருந்தேன். இப்போது மூன்று மாதங்களாகத்தான் கீழ்பாக்கத்தில் இப்போது குடியிருந்து வருகிறேன். இப்போது இந்த தாக்குதல் நடந்ததன் காரணமாக வீட்டின் உரிமையாளர் என்னை உடனடியாக காலி பண்ண சொல்கிறார்

.

டி.நகரில் நான் நடத்திவரும் சவுக்கு மீடியா அலுவலகத்தின் உரிமையாளர்  சென்னை காவல்துறையால் மிரட்டப்பட்டு அந்த அலுவலகத்தை என்னை காலி பண்ண செய்தார்கள். காவல்துறைக்கும், தமிழக ஆட்சியாளர்களுக்கும் இந்த சவுக்கு மீடியா நடைபெறக்கூடாது என்பது மட்டும்தான் நோக்கம். அந்த அடிப்படையில்தான் இந்த தாக்குதல் நடந்திருப்பதாக நான் கருதுகிறேன். காலையில் 10 மணிக்கு நான் எனது வாகனத்தில் அலுவலகத்திற்கு சென்றபோது என் வீட்டில் தாக்குதல் நடத்திய கும்பல் பின்னால் துரத்தி வந்து என் வாகனத்தின் மீது கல் வீசி இருந்தார்கள்.

ஒருவேளை இந்த தாக்குதல் நடந்த போது நான் வீட்டில் இருந்திருந்தால் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும். இதன் காரணமாக என் மீது பொய் வழக்கு போட்டு கடந்த நான்கு ஆண்டுகளாக என்னை அலைக்கழித்தார்கள். அவர்களால் அது முடியவில்லை என்றதும் இன்று என் வீட்டின் மீதும், என் மீதும் கொலை வெறி தாக்குதல் நடத்தும் அளவிற்கு துணிந்து விட்டார்கள்'' எனத் தெரிவித்துள்ளார் சவுக்கு சங்கர். 

இதையும் படிங்க: அரசியல் அநாகரீகம் அண்ணாமலை.. செல்வப்பெருந்தகை கடும் தாக்கு.. செந்தில் பாலாஜி, விஜய்க்கு சப்போர்ட்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share