×
 

நீதிமன்றங்களில் ஆண், பெண், மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்தனி கழிவறை அவசியம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு...

நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களிலும் ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்கள் என தனித்தனியாக கழிவறைகள் அமைக்க வேண்டும்.

சுத்தமான பொதுக் கழிவறைகளை அணுகுவது அடிப்படை உரிமை, மனித கண்ணியம் என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும், தீர்ப்பாயங்களிலும் சுத்தமான மற்றும் தனித்தனி கழிவறைகள் இருப்பதும், அதை ஆண்டு முழுவதும் பராமரிப்பதும், தேவையான நிதியை ஒதுக்குவதும் அவசியம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பரிதிவாலா, ஆர். மகாதேவன் உத்தரவிட்டுள்ளனர்.


கடந்த 2023ம் ஆண்டு ராஜீவ் கலிதியா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில் “ அனைத்து நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களிலும் கழிவறைகள் ஏற்படுத்த வேண்டும், அதை சுத்தமாக பராமரிக்க உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பரிதிவாலா, ஆர். மகாதேவன் நேற்று சில உத்தரவுகளை இந்த வழக்கில் பிறப்பித்தனர்.


அதில் “ நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களிலும் ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்கள் பயன்படுத்தும் வகையில் தனித்தனியாக கழிவறைகளை ஏற்படுத்த வேண்டும். இந்த கழிவறைகளை எப்போதும் சுத்தமாக, ஆண்டு முழுவதும் வைத்திருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் முக்கியமாக சுத்தமான குடிநீர் வழங்கவும் மாநிலஅரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இந்த கழிவறைகளைப் பராமரிக்க தேவையான நிதியையும், புதிய கழிவறைகளை கட்டவும் நிதியை அரசு ஒதுக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் கழிவறைக்குள் பெண்கள் பயன்படுத்தும் வகையில் சானிட்டரி நேப்கின்கள், நேப்கின்களை அப்புறப்படுத்தும் குப்பைத் தொட்டிகளையும் வைக்க வேண்டும்.

இதையும் படிங்க: அமெரிக்க நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு... அதிபராகுமுன் கைதாகிறார் டிரம்ப்..?

தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் பொதுக்கழிவறைகளை நாங்கள் பார்த்துள்ளோம் அதில் சில மட்டுமே சுத்தமாகவும், பயன்படுத்தக்கூடியவகையில் இருக்கின்றன. மாவட்ட நீதிமன்றங்களில் மக்கள் பயன்படுத்தம் வகையில் கழிவறைகள் இல்லை, குறிப்பாக மாஜிஸ்திரேட் கோர்ட், கிராமப்புறங்களில் கழிவறை வசதி இல்லை என்பது ஆழ்ந்த வேதனைக்குரியது. இது நீதித்துறையில் மிகப்பெரிய குறையாகும். 
முறையான கழிவறை வசதிகள் செய்து கொடுப்பதும், அதை பராமரிப்பதும், எளிதாக அணுகக்கூடிய வகையில் வைப்பதும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகளில் ஒன்று, மனித கண்ணியமும் கூட. அனைவருக்கும் சுகாதாரமான, பாதுகாப்பான சூழலை அமைத்துக் கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும். நான்கு மாதங்களுக்குள் இந்த உத்தரவு எந்த அளவு அமல்படுத்தப்பட்டுள்ளது குறித்து மாநில அரசுகள் அறிக்கை அளிக்கவேண்டும் எனத் தீர்ப்பளித்தனர்.

இதையும் படிங்க: இலவசங்கள் தர பணம் இருக்கு!!! நீதிபதிகளுக்கு பணமில்லையா?? உச்ச நீதிமன்றம் விளாசல்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share