×
 

சிவசேனா (உத்தவ்) கட்சியும் "இந்தியா கூட்டணி"யில் இருந்து விலகல்: மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி

'அழிவின் விளிம்பி'ல் இருக்கும் 'இந்தியா கூட்டணி'யில் இருந்து சிவசேனா (உத்தவ்) கட்சியும் விலகல்; உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி..

முழுமையாக கலைக்கப்படும் நிலையில் இருக்கும் இந்தியா கூட்டணிக்கு இறுதி அடியாக சிவசேனா முத்த முத்தாக்கரே பிரிவு கட்சியும் விலக முடிவு எடுத்துள்ளது. மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தலில் அந்த கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. 

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது பாஜக கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு இந்தியா கூட்டணி என்ற பெயரில் மகா கூட்டணி அமைத்திருந்தனர். 

ஆனால் இந்த கூட்டணி தொடங்கியதில் இருந்தே பிரச்சினை தான். தேர்தலுக்கு முன்பும் தேர்தல் தோல்விக்கு பிறகும் ஒவ்வொரு கட்சிகளாக இந்தியா கூட்டணியில் இருந்து விலகி வந்தன. தற்போது இந்தக் கூட்டணி முடிவு பெறும் நிலையில் உள்ளது. முக்கிய கட்சிகளில் திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமே கூட்டணியில் நீடித்து வருகிறது.

இதையும் படிங்க: சூடுபிடிக்கும் டெல்லி அரசியல் களம்.. மும்முனைப் போட்டியில் தலைநகர்...

"இந்தியா கூட்டணியில் சரியான குறிக்கோளும், செயல் திட்டமும்  இல்லாமல் இருப்பது தமக்கு பெருத்த  ஏமாற்றத்தை அளிப்பதாக' ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா சமீபத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்த நிலைமைக்கு அவர் காங்கிரஸின் தலைமையே காரணம் என்றும் கூறியிருந்தார்.  இந்தக் கூட்டணி நாடாளுமன்ற தேர்தலுக்காக மட்டுமே  உருவாக்கப்பட்டது என்று இருப்பின் இது தொடர்வதில் எந்த பயனும் இல்லை என்றும், ஆகவே இந்தக் கூட்டணியை கலைத்து விடலாம் என்றும் அவர் சாடியிருந்தார். 

வரவிருக்கும் டெல்லி சட்டசபை தேர்தல் குறித்து பேசுகையில், "இந்தியா  கூட்டணி என்பது மக்களவைத் தேர்தலுக்காக மட்டுமே" என்று ஆர்ஜேடி தலைவர் ஒருவர் கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டதற்கு, தேசிய மாநாட்டுகட்சியின் தலைவரான உமர் அப்துல்லா, "தம் நினைவிற்கு எட்டிய வரை, இந்தியா கூட்டணி எத்தனை நாள் நீடிக்க வேண்டும் என்ற காலக்கெடு எதுவும் இல்லை. துரதிர்ஷ்டவசமாக, இந்த கூட்டணியின் கூட்டம் எதுவும் இன்று வரை  நடைபெறவில்லை. அதன் தலைமை பற்றியோ செயல்திட்டங்கள் பற்றியோ இந்த கூட்டணி இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறதா என்பது பற்றி கூட எந்தத் தெளிவும் இல்லை" என்றும் அவர் தெரிவித்து இருந்தார். 

 இதனைத் தொடர்ந்து இந்தக் கூட்டணியின் இன்னொரு முக்கிய கட்சியான மகாராஷ்டிரா மாநிலத்தின் சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் 
இந்தியா கூட்டணிக்குள் ஒற்றுமை இல்லை என்று கூறியிருந்தார். இவர் நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரசின் சீர்குலைவு குறித்தும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும்  உமர் அப்துல்லாவின் கருத்தை முற்றிலும் ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தார்.  

மேலும் சஞ்சய் ராவத் இன்று நிருபர்களிடம் பேசுகையில்,  மகாராஷ்டிரா மாநிலத்தில் வரவிருக்கின்ற பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெறவுள்ள தேர்தலில் தனது கட்சி தனித்து போட்டியிடும் என்று அறிவித்து இருக்கிறார்.

இந்தக் கூட்டணியின் இன்னொரு முக்கிய தலைவரும்,  மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச்சருமான மம்தா பானர்ஜி (திரிணாமுல் காங்கிரஸ்)  இந்தக் கூட்டணி குறித்து பல நேரங்களில் தமது சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு இருக்கிறார்.

இது இப்படி இருக்க, ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் தமது கட்சி இந்தக் கூட்டணியில் இல்லவே இல்லை என்பது போலத்தான்
 செயல்பட்டு கொண்டிருக்கிறார். இந்தியா கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகள் இந்த தேர்தலில் அவருக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளன. 

 இப்படிப்பட்ட விமர்சனங்களுக்கு காங்கிரஸ் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் பொழுது இந்தக் கூட்டணியின் கூடாரம் காலியாவதற்கு இன்னும் நேரம் மட்டுமே குறிக்கப்படவில்லை என்பது போன்ற  பிம்பமே தோன்றுகிறது.

இதையும் படிங்க: டெல்லி தேர்தலில் தில்லுமுல்லு: அதிகாரிகள், பாஜகவிடம் சரண் அடைந்து விட்டனர்; கெஜ்ரிவால் சரமாரி குற்றச்சாட்டு..

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share