×
 

எதுக்குடா காஷ்மீர் இந்தியாவுடன் இருக்கணும்..? சுந்தரவல்லி லிஸ்டில் பியூஸ் மானுஷ் வெறித்தனம்..!

அதானி விட்டுவிடுவானா? உன் கீழே இருப்பதை பிடித்து இழுத்து அறுத்துவிட மாட்டான்? என்னையா ஏமாற்று வேலை இது.

பியூஷ் மானுஷ்... சுற்றுச்சூழல் செயற்பாட்டாளராக அறியப்படுபவர். அதைவிட சர்ச்சைகளில் சிக்கி புகழ்பெற்றவர். 2016-ல் சேலத்தில் மூள்ளுவாடி பாலம் கட்டுவதற்கு எதிராக போராடியபோது கைது செய்யப்பட்டார். 2019-ல் சேலம் பாஜக அலுவலகத்தில் கேள்வி எழுப்பியபோது தாக்கப்பட்டார். 2020-ல் வாடகை வீட்டை அபகரிக்க முயன்றதாக புகார் எழுந்து, வீட்டு உரிமையாளர் ஆயிஷா குமாரி மீது தாக்குதல் நடத்தியதாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் வீட்டை காலி செய்ய மறுத்ததாகவும், வாடகை செலுத்தவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

சமூக ஊடகங்களில், குறிப்பாக முகநூலில், அநியாயங்களுக்கு எதிராக பொங்கி எழுபவர். இப்போது காஷ்மீர் மக்களுக்காக பொங்கி எழுந்து மீண்டும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளார்.

தனது எக்ஸ்தளப்பதிவில், ''மோடி ஒரு பக்கம் பிரச்சாரத்தில் இறங்கிவிட்டார். எலெக்ஷனுக்கு தயாராகி விட்டார் மனுஷன். பீகாரில் போய் ஹோத்தாஹேய் ஹோத்தா ஹேய்... என ஆரம்பித்து விட்டார் மனுஷன். நாங்கள் துரத்துவம் கடைசி வரை தீவிரவாதிகளை விட மாட்டோம் என அடிக்கடி கூறுவார். இதே டயலாக்கை வித்தியாசமாக இப்போது இங்கிலீஷில் பேசி இருக்கிறார்.

இதையும் படிங்க: மாஸ் என்ட்ரி.. அரபிக்கடலில் விக்ராந்த் போர்க்கப்பல்.. பதற்றத்தில் பாகிஸ்தான்..!

இதே டயலாக்கைத்தான் புல்வாமாவில் பேசினார். 350 கிலோ ஆர்டிஎக்ஸ் இந்தியாவிற்குள் வந்தது. சின்ன ஒரு பார்சல் எல்லாம் இல்லை. 350 கிலோ ஆர்டிஎக்ஸ். அந்த குற்றவாளிகளை பிடித்து விட்டார்களா? என்னடா பிம்பிலாக்கி பிலாக்கி காட்டுறீங்க. மோடி இந்தியாவின் பாதுகாப்பில் காம்ப்ரமைஸ் ஆவார். அவருக்கு அதில் எல்லாம் அக்கறை இல்லை.  நான் ஏன் இப்படிச் சொல்கிறேன் என்று கவனித்துக் கேளுங்கள்.

பாகிஸ்தான்- இந்தியா எல்லையில் சுமார் ஒரு கிலோ மீட்டரில் 445 சதுர கிலோமீட்டர். பாரிஸ் என்கிற நகரத்தை விட நான்கு மடங்கு அதிகம். 40 இண்டு 100 கிலோ மீட்டர். 445 சதுர கிலோமீட்டர் இடத்தை  அதானிக்கு கொடுத்திருக்கிறார்கள். எங்கே பாகிஸ்தானின் பார்டரில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில். எதற்காக தெரியுமா? சோலார் பேனல் நிறுவுவதற்கு. போருக்கு போவாரா இந்த மனிதன்? இங்கே பெரிதாக பில்டப் செய்து கொள்கிறார்கள். பிஓகேவை எடுத்து வந்து விடுவோம் என டமால் டுமில் கிளப்புகிறார்கள்.

வாய்ப்பிருக்கிறதா? பண்ணி விடுவாயா? அதானி விட்டுவிடுவானா? உன் கீழே இருப்பதை பிடித்து இழுத்து அறுத்துவிட மாட்டான்? என்னையா ஏமாற்று வேலை இது. நாட்டை ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். ஒரு லட்சத்து 80 ஆயிரம்  ராணுவ வீரர்களை மூன்று வருடங்களாக பணியில் அமர்த்தவில்லையாம். எத்தனையோ பட்டாலியன்களை நிறுத்திவிட்டு ஒரு செக்டர் இருக்க வேண்டிய இடத்தில் இரண்டு செக்டர்கள் நிறுவி இருக்கிறார்கள். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.

நீங்கள் தொடர்ந்து ஏன் காஷ்மீர் மக்களை துன்புறுத்துகிறீர்கள்? இப்போது காஷ்மீர் மக்களை மாணவட்கள் அங்கே, இங்கே என்று அடிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். இந்த தீவிரவாத தாக்குதல் நிகழ்வுக்கு முன்னாடி காஷ்மீர் மக்கள் மிகப்பெரிய பனிப் பொழிவின்போது அங்கே பெரிய ஆபத்து நடந்தது. எல்லாம் ஸ்தம்பித்து விட்டது. அனைத்து டூரிஸ்ட் மக்களையும் அங்கிருந்த காஷ்மீர் மக்கள் இங்கே வாருங்கள் எங்கள் வீட்டில் தங்கிக் கொள்ளுங்கள் என கதவை திறந்து வைத்தார்கள்.

மறந்து விட்டீர்களாடா நாய்களா? மறந்து விட்டீர்களா? நன்றி கெட்ட நாய்களா? என்னடா மனிதன் நீங்கள் எல்லாம்? ஒருத்தன் எழுதுகிறான் காஸா மாதிரி காஷ்மீரில் அழித்து விட வேண்டும் என்று. எங்கே சென்னையை காஸா மாதிரி அழித்து விடுவேன் என்று சொல் பார்க்கலாம். போலீஸ் உன்னை பிடித்து விட்டு போய்விடும். எங்கே செய்து காட்டேன் பார்க்கலாம். ஆனால் காஷ்மீருக்கு எதிராக குரல் கொடுத்தால் இங்கே நடவடிக்கை இல்லை. இதுதான் காஷ்மீர் மக்கள் மீது மரியாதையா? இவ்வளவு கீழ்த்தரமாக நாம் அவர்களை நடத்தியும் அவன் இதயத்தை திறந்து வைக்கிறான்.

ஒருத்தன் ஒரு சின்ன பையனை தோளில் சுமந்து தூக்கிக் கொண்டு ஓடுகிறான்.டெல்லியில் இருந்து, குஜராத்திலிருந்து அனைவரும் செல்கிறார்கள் அவ்வளவு உதவி செய்து இருக்கிறார்கள் காஷ்மீர் மக்கள் என்று. கருமம் பிடித்தவர்களா? காஷ்மீர் மக்களை அடிக்கிறீர்கள்? எப்படிடா நம்முடன் அவன் இருப்பான்? எதற்கு இருக்க வேண்டும் நமது இந்தியாவுடன்?

நீ அவனுக்கு முதல்வர் பதவி கொடுக்க மாட்டாய். அவனுக்காக தேர்தல் நடத்த மாட்டாய். யூனியன் பிரதேசம் ஆக்கி விடுவாய். அரசியல் உரிமை கொடுக்க மாட்டாய். ஒரு அவர்களை ஆட்சி செய்வதற்கு ஒரு பிராமணனை உட்கார வைப்பாய். இதெல்லாம் கொடுமையா இல்லையாடா? உங்களை எல்லாம் நினைத்துப் பார்க்கவே கேவலமாக இருக்கிறது.

26 பேர் இறந்து போயிருக்கிறார்கள். கொடூரமான சம்பவம். ஆனால் நன்றாக வைத்துக் கொள்ளுங்கள். புல்வாமா யார் செய்தார்களோ அதைத்தான் இப்போதும் அவர்கள் பஹல்காமில் செய்திருக்கிறார்கள். நான் யாரை கை காட்டுகிறேன் என்று நன்றாக தெரிகிறதா?'' என மோடியை கடுமையாகத் தாக்கியுள்ளார் பியூஷ் மானுஷ். 

Adani / pakistan / modi / bihar elections / pulwama / pahalgam!! pic.twitter.com/MAv7zfMUiL

— Piyush Manush (@piyushmanush) April 24, 2025

 

அவர் மீது தேசத்துரோக வழக்கு தொடுத்து சிறையில் அடைக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். 

இதையும் படிங்க: பாகிஸ்தானுடன் கைகோர்த்த ஹமாஸ் பயங்கரவாதிகள்... காஷ்மீர் தாக்குதலில் அதிர்ச்சி..! வீடியோ

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share