×
 

‘150 நாள், சம்பளத்தை ரூ.400ஆக உயர்த்துங்கள்’.. சோனியா காந்தி மத்திய அரசுக்கு கோரிக்கை..!

100 நாட்கள் வேலைத் திட்டத்தில் பணியாற்றுவோருக்கு குறைந்தபட்சமாக ரூ.400 ஊதியம் தர வேண்டும் என்று மாநிலங்களவை எம்.பி சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

100 நாட்கள் வேலைத் திட்டம் என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்துக்கு மத்திய அரசு பட்ஜெட்டில் குறைவாக நிதி ஒதுக்கியது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவரும் மாநிலங்களவை எம்.பியுமான சோனியா காந்தி கடுமையாக விமர்சித்தார்.

மத்திய பட்ஜெட் குறித்த விவாதம் நாடாளுமன்றத்தில் நடந்து வருகிறது. மாநிலங்களவையில் இன்று காங்கிரஸ் எம்.பி. சோனியா காந்தி பேசுகையில் “மத்தியில் ஆளும் பாஜக அரசு, மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தை பலவீனப்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு அரசு, மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. 

இதையும் படிங்க: பாகிஸ்தானில் சீனர்கள் நடத்திய போலி கால் சென்டர்... ரெய்டின்போது உள்ளே புகுந்து மக்கள் வைத்த ட்விஸ்ட்..!

ஆனால், காங்கிரஸ் ஆட்சியால் கொண்டுவரப்பட்டதாலேயே இந்தத் திட்டத்தை பலவீனப்படுத்தும் மத்திய அரசின் செயல்பாடுகள் எனக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. மத்திய பட்ஜெட்டில் இந்தத் திட்டத்துக்கு கடந்த ஆண்டு ஒதுக்கிய அதே அளவான ரூ.86 ஆயிரம் கோடிதான் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீடு என்பது உண்மையில் கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியைவிட ரூ.4 ஆயிரம் கோடி குறைவு. முந்தைய ஆண்டுகளில் நிலுவையில் இருக்கும் ஊதியத்தை வழங்கவே 20 சதவீதம் நிதி போதுமானதாக இருக்கும் நிலையில் இந்தத் தி்ட்டத்துக்கு ஒதுக்கிய நிதி போதாது.

100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் பல்வேறு சவால்களைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக கட்டாய ஆதார் முறையில் பேமெண்ட் முறை, தேசிய மொபைல் கண்காணிப்பு முறை, ஊதியத்தை தாமதமாக வழங்குவது, ஊதிய விகிதம் குறைவு போன்ற சவால்களுடன் திட்டம் நடத்தப்படுகிறது.

இந்தத் திட்டத்துக்கான நிதியை அதிகப்படுத்த வேண்டும், விரிவுபடுத்த வேண்டும். இந்தத் திட்டத்தில் பணியாற்றுவோருக்கு குறைந்தபட்சமாக ரூ.400 ஊதியம் தர வேண்டும். மொபைல்மூலம் கண்காணிப்பு திட்டம், ஆதார் அடிப்படையில் பேமெண்ட் முறை ஆகியவற்றை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 நாட்கள் வேலை்திட்டத்துக்கான நாட்களை 150 நாட்களாக உயர்த்த வேண்டும், கிராமப்புறங்களில் லட்சக்கணக்காண மக்கள் இன்னும் இந்த பணியை நம்பி இருக்கும் நிலையில் அவர்களை மான்புடன் நடத்த வேண்டும், நிதிப் பாதுகாப்பை அளிக்க வேண்டும்.

இவ்வாறு சோனியா காந்தி தெரிவித்தார்.

இதையும் படிங்க: அவுரங்கசீப்பை புனிதப்படுத்துபவர்கள் ‘துரோகிகள்’.. தீயில் நெய்வார்த்த மகாராஷ்டிரா துணை முதல்வர் பேச்சு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share