×
 

தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல் கைது! ஏணி வைத்து வீட்டுக்குள் இறங்கி அதிகாரிகள் நடவடிக்கை...

தென் கொரியாவில் ராணுவ ஆட்சியை அமல்படுத்தி, கிளர்ச்சியை தூண்ட முயன்ற குற்றச்சாட்டில் அந்நாட்டு அதிபர் யூன் சுக் யோலை ஊழல் தடுப்புப் பிரிவினர் இன்று கைது செய்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென் கொரியாவில் ஆட்சியில் இருக்கும் ஒரு அதிபர் கைது செய்யப்படுவது இதுதான் முதல்முறையாகும். 
அதிபர் யூன் சுக் யோல் இல்லத்தில் ஏராளமான போலீஸார், விசாரணை அதிகாரிகள், துணை ராணுவப்படையினர், பாதுகாப்பு வாகனங்கள் என பரபரப்பாக காட்சியளிக்கிறது. ஏராளமான பாதுகாப்பு வாகனங்கள், போலீஸ் வாகனங்கள் அதிபர் இல்லத்திலிருந்து புறப்பட்டவாறு இருந்ததாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த 3ம் தேதி தென் கொரியாவில் ராணுவ சட்டத்தை அமல்படுத்தி, நாட்டில் கிளர்ச்சியை ஏற்படுத்த முயன்றதாக அதிபர் யூன் சுக் யோல் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக அதிபர் யூன் சுக் மீது விசாரணை நடந்து வந்தது.


ஏற்கெனவே ஒருமுறை ஊழல் தடுப்பு விசாரணை அதிகாரிகள் அதிபர் யூன் சுக் இல்லத்துக்கு சென்று அவரை விசாரணை நடத்தி கைது செய்ய முயன்றனர்.
ஆனால், அதிபரின் பாதுகாப்பு அதிகாரிகள் ஊழல் தடுப்பு அதிகாரிகளை கைது செய்ய அனுமதி மறுத்துவிட்டனர். இது தொடர்பாக அதிபரின் பாதுகாப்பு படையினருக்கும், போலீஸார், ஊழல்தடுப்புப் பிரிவினர் சமாதானப் பேச்சு நடத்தியும் பலன் இல்லை. அதிபர் யூன் சுக் யோலை கைது செய்ய நீதிமன்றம் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதையடுத்து, அவர் அதிபர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில் 2வது முறையாக தலைநகர் சியோலில் உள்ள ஹனம் டாங் இல்லத்தில் தங்கியிருக்கும் அதிபர் யூன் சுக் யோலை கைது செய்ய ஊழல் தடுப்பு அதிகாரிகள், போலீஸார் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முயன்றனர். இந்த முறையும் அதிபரின் பாதுகாப்பு அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை.


இதையடுத்து போலீஸார், ஊழல் தடுப்பு விசாரணை அதிகாரிகள் பாதுகாப்பு படையினரை மீறி குடியுருப்பு வளாகத்துக்குள் சென்றனர். 
அதிபர் இல்லத்தில் அவரை கைது செய்வதைத் தடுக்கும் வகையில் 3 வகையான தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன, அந்தத் தடுப்புகளை போலீஸாரும், ஊழல் தடுப்பு அதிகாரிகளும் ஏணி வைத்து ஏறி உள்ளே சென்று தடுப்புகளை உடைத்தனர். அங்கு அதிபரின் தனிப்பிரிவு பாதுகாவலர்களிடம் நீதிமன்றத்தின் உத்தரவுகளை வழங்கி, அதிபர் யூன் சுக் யோலை கைது செய்தனர், இதை தென் கொரிய அதிகாரிகளும் உறுதி செய்தனர்.
அதிபர் யூன் சுக் யோலை அத்துமீறி அவரின் இல்லத்துக்குள் சென்று கைது செய்தது சட்டவிரோதமானது என்று கூறி அதிபரின் ஆதரவாளர்கள் சாலையில் அமர்ந்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: 'கவுன்சிலிங்' என்ற பெயரில், 50 மாணவிகள் பாலியல் பலாத்காரம்; 45 வயது உளவியல் டாக்டர் 'போக்சோ' சட்டத்தில் கைது...


இதற்கிடையே அதிபர் யூன் சுக் யோல்வெளியிட்ட வீடியோஒன்றில் “ எந்தஒரு விரும்பத்தகாத சம்பவங்களும், வன்முறையும் நடக்கக்கூடாது என்பதற்காக ஊழல் தடுப்பு விசாரணை அதிகாரிகள் விசாரணைக்கு ஆஜராக ஒப்புக்கொண்டேன். என் மீதான குற்றச்சாட்டு பொய்யானது, நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லை. என்னை கைது செய்யும் அதிகாரம் விசாரணை அமைப்புகளுக்கோ, அல்லது கைது செய்ய உத்தரவிட நீதிமன்றத்துக்கோ அதிகாரிமில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இலங்கை மட்டுமல்ல; இங்கிலாந்து கடற்படையுமா... இப்படி? ஆழ்கடலில் தமிழக மீனவர்கள் 10 பேர் கைது!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share