×
 

வரலாற்றிலேயே முதல் முறை.. நாளை மறுநாள் தரமான சம்பவம் செய்யப்போகும் முதல்வர் மு.க.ஸ்டாலின்! 

பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மற்றும் பதிவாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.  

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலை கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களின் ஆலோசனை கூட்டம் வரும் 16 ஆம் தேதி மாலை 5 மணிக்கு சென்னை தலைமை சக்தத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற இருக்கிறது. 

குறிப்பாக ஆளுநருக்கு எதிரான வழக்கில் கடந்த 8ம்தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து நேற்றைய தினம் தமிழ்நாடு அரசு அதனை அரசுதழில் வெளியிட்டது. 10 மசோதாக்களுக்கும் சட்டமானதாக அறிவிப்பு வெளியானது.  கடந்த 2023 ஆம் ஆண்டு 18ஆம் தேதி நவம்பர் மாதம் ஆளுநருக்கு அனுப்பிய தேதியிலிருந்து அவருக்கு ஒப்புதல் அளித்ததாக தமிழ்நாடு அரசு அரசிதழில்  வெளியிட்டது. 

இதையும் படிங்க: பீதியின் உச்சத்தில் முதல்வர் ஸ்டாலின்.. ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது.. டார்.. டாராக கிழித்த எடப்பாடி..!

வரும் 16 ஆம் தேதி மாலை தமிழ்நாட்டினுடைய உயர்கல்வியை மேம்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில அனைத்து பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களினுடைய ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. இது ஒரு மிக முக்கியமான ஒரு  கூட்டமாக இது கருதப்படுகிறது. குறிப்பாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து,  இது மிக, மிக முக்கியமான கூட்டமாக பார்க்கப்படுகிறது. 

ஏனெனில் தமிழ்நாட்டின் பல்கலைக்கழக வரலாற்றில் முதல் முறையாக முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் துணை வேந்தர்களின் ஆலோசனைக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: நானே இப்படி பண்ணிட்டேனே..! மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவித்த துரைமுருகன்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share