×
 

வக்பு சொத்தை அனுபவிக்கும் தனி நபர்கள்.. சட்டத் திருத்தத்தை மனதார வரவேற்கும் ஷேக் தாவூத்..!!

வக்பு வாரிய சொத்துகளை சில தனிநபர்கள் அனுபவிக்கிறார்கள் என்று தமிழ் மாநில முஸ்லீம் லீக் நிறுவன தலைவர் ஷேக்தாவூத் தெரிவித்தார்.

ஷேக் தாவூத் காட்பாடியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,"வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது இஸ்லாமிய மக்களுக்கும், சமுதாயத்துக்கும் தீமை ஏற்படும் என எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர்.
மத்தியில் ஆளும் பாஜக அரசு இது தேவை என வலியுறுத்துகிறது. இந்தியாவில் ராணுவம், ரயில்வே துறைக்கு அடுத்து மூன்றாவதாக அதிக சொத்துகள் வக்பு வாரியத்திடம்தான் உள்ளது. ஏறக்குறைய 9 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான சொத்துகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதில், எது உண்மை என்பதை கண்டறிவதற்கு இந்தச் சட்ட மசோதா அவசியம் தேவை.


வக்பு சொத்து வருமானத்தை இந்தியா முழுவதும் 200-ல் இருந்து 300 பேர் மட்டுமே அனுபவித்து வருகிறார்கள். ஏழை, எளிய மக்களுக்கு இந்த வருமானம் சென்றடையவில்லை. இது மிகவும் வருத்தத்துக்கு உரியது. வக்பு சொத்தின் மூலம் எவ்வளவு பேர் கல்வியில் உயர்ந்தார்கள், எவ்வளவு பேர் வேலைவாய்ப்பு பெற்றார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், வக்பு வாரியம் மூலம் ஏழை மக்களுக்கு எந்த உதவியும் செய்யப்படவில்லை. இந்த வக்பு சட்ட திருத்த மசோதாவை தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி முழு மனதுடன் வரவேற்கிறது.
இந்த மசோதாவில் இரண்டு பெண்களை வாரிய உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது பதர்சயீத் என்பவரை வக்பு வாரிய தலைவராக நியமித்தார். எனவே, இந்தியாவில் தமிழகம் முன் மாதிரியாக அப்போதே இருந்துள்ளது. வக்பு வாரிய சொத்துகளை சில தனிநபர்கள் அனுபவிக்கிறார்கள். அவர்களிடம் இருந்து அந்தச் சொத்தை திரும்பப் பெற வேண்டும்.  வக்பு வாரியத்தில் எவ்வளவு சொத்துக்கள் உள்ளன என மத்திய, மாநில அரசுகள் வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்” என்று தாவூத் தெரிவித்தார்.
 

இதையும் படிங்க: வக்ஃபு திருத்த மசோதா முஸ்லீம்களை ஓரங்கட்டும் ஆயுதம்..! பாஜக அரசை விளாசிய செல்வப்பெருந்தகை..!

இதையும் படிங்க: கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வக்பு சட்டத்திருத்த மசோதா அமல்..! கிரீன் சிக்னல் காட்டிய ஜனாதிபதி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share