×
 

Tirupathi Stampede: நாட்டையே உலுக்கிய 6 பேரின் மரணம்; சோகத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்ட பதிவு! 

திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை(10ம் தேதி) துவங்கி 19ம் தேதி வரை 10 நாட்கள் சொர்க்கவாசல் திறந்து இருக்கும். இதற்கான தரிசனத்திற்கான இலவச டோக்கன் வாங்க நின்றிருந்த பக்தர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 6 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 34 பேர் திருப்பதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கூட்ட நெரிசலில் சிக்கி தமிழ்நாட்டு பெண்கள் இருவர் உயிரிழந்துள்ளனர் . சேலத்தை சேர்ந்த மல்லிகா (40) என்ற பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.அதேபோல்  மற்றொரு பெண் பொள்ளாச்சியை சேர்ந்த நிர்மலா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்ததாக  அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். 

இதையும் படிங்க: இஸ்ரோ தலைமை பொறுப்பில் கலக்கும் தமிழர்கள்...! உலகையே திரும்பி வைக்க இந்தியர்; வி.நாராயணுக்கு ஸ்டாலின் வாழ்த்து! 

இதனிடையே திருப்பதி கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட அப்பாவி மக்கள் உயிரிழந்தது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்” எனக்குறிப்பிட்டுள்ளார்.  

இதையும் படிங்க: துப்பட்டாவை கழட்டி வச்சிட்டு வாங்க; முதல்வர் பங்கேற்க நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு நிகழ்ந்த அவலம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share