“பொங்கல் போனஸ்” - 3 அல்ல 6 நாட்கள் விடுமுறை - யாருக்கெல்லாம் தெரியுமா?
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து 6 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ,l,
தமிழ்நாட்டில் வரும் ஜனவரி 14ம் தேதி தைப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து ஜனவரி 15, 16, 18, 19 ஆகிய தேதிகள் அரசு விடுமுறை நாட்கள் என்பதாலும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்று பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடும் வகையில், அதற்கு இடைப்பட்ட நாளான ஜனவரி 17ம் தேதி அன்று (வெள்ளிக்கிழமை) தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்குமாறு பலதரப்பிலிருந்து அரசுக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தன.
அக்கோரிக்கைகளை ஏற்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊர் சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், ஜனவரி 17ம் தேதியும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்தும், அவ்விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், ஜனவரி 25ம் தேதியை (சனிக்கிழமை) பணி நாளாக அறிவித்தும் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: விழுப்புரம் சிறுமி உயிரிழப்பு...நிவாரணத்தை நிராகரித்த பெற்றோர் ..கை பிடித்து ஆறுதல் சொன்ன அமைச்சர் பொன்முடி..!
இதையும் படிங்க: தொட்டியில் விழுந்து சாகவில்லை.. எப்படி வகுப்பறையை விட்டு வெளியே வந்தது? ..குழந்தை மரணத்தால் கதறும் பெற்றோர் !