×
 

காந்தியை சுட்டுகொன்று கொண்டாடியவர்கள் எந்த சித்தாந்தத்தைச் சேர்ந்தவர்கள்.. சொல்லுங்க ஆளுநரே.. செல்வபெருந்தகை கிடுக்கிப்பிடி.!

எந்தச் சித்தாந்தம் உடையவர்கள் காந்தியை சுட்டு கொன்று, அதைக் கொண்டாடினார்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சொல்லுவாரா என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தளம் வாயிலாகப் பதிலளித்துள்ளார். அதில், ”தமிழ்நாடு ஆளுநர் தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான இடங்களின் வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும். கிண்டியில் 27 ஜனவரி 1956 அன்று ராஜ ரத்தினம் நாதஸ்வரம் வாசிக்க, சுப்புலக்ஷ்மி ரகுபதி ராகவ பஜனை செய்ய, அப்போதைய மதராஸ் முதல்வர் ராஜகோபாலாச்சாரி காந்தி நினைவகம் திறக்கப்பட்டது. அதுவே பின் நாளில் மக்களால் காந்தி மண்டபம் என அழைக்கப்பட்டு பெயரானது.

ஆட்சியாளர்கள் தான் சொல்வதை கேட்டே ஆக வேண்டும் என்னும் மனநிலையில் இருந்து ஆளுநர் விலக வேண்டும். காந்தியடிகளின் நினைவு தினம், ஒவ்வொரு வருடமும் எழும்பூர் அருங்காட்சியகத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் அனுஷ்டிக்கப் படுகிறது. இதே ஆளுநர் கடந்த 2023இல் முதல்வருடன் காந்தியடிகளின் நினைவு தினத்தில் மரியாதை செலுத்தினார். காந்தியின் இறுதிக் காலத்தில் அவரது தனிச் செயலாளராக இருந்த தியாரே லால் நய்யார் தாம் எழுதிய 'மகாத்மா காந்தி கடைசிக் கட்டம்' என்ற நூலில் வெள்ளிக் கிழமை அன்று நல்ல செய்தி வரும். எனவே ரேடியோவை தொடர்ந்து கேட்கவும் என்று ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் சில இடங்களில் ஏற்கெனவே கூறியிருந்தார்கள்.



அது மட்டுமல்ல, காந்தி கொல்லப்பட்ட செய்தி வெளியானதும் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் பல இடங்களில் இனிப்புகளை விநியோகித்து கொண்டாடினார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். எந்த சித்தாந்தம் உடையவர்கள் தேசப் பிதாவின் இறப்பைக்கூட கொண்டாடினார்கள் என்று ஆளுநர் சொல்லுவாரா?
தசரா விழாவின் போது அரக்கனான ராவணனை எரிப்பதுபோல, இனிமேல் காந்தி கொல்லப்பட்டதை ஒவ்வொரு வருடமும் இப்படித்தான் சுட்டு கொண்டாடப் போகிறோம்” என ஊடகங்களிடம் பகிரங்கமாக சொன்னேரே புஜா சகுன் பாண்டே, அவர் எந்த கொள்கையை அடிப்படையாகக் கொண்டவர் என்று ஆளுநர் சொல்லுவாரா?

தந்தை பெரியார், காந்தி கொடியவன் கோட்சேவால் சுடப்பட்டு இறந்தவுடன், இந்த தேசத்திற்கு காந்தி தேசம் என்று பெரியடப்படவேண்டும் என்று கூறியதை ஆளுநருக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்” என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.



முன்னதாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட  எக்ஸ் பதிவில், "காந்தி மண்டபம், சென்னை கிண்டி தேசிய உயிரியல் பூங்காவை ஒட்டியுள்ள ஒரு பரந்த நிலத்தில் 1956ம் ஆண்டு காமராஜரால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான நினைவுச் சின்னமாகும். காந்தி நினைவு நிகழ்வுகளை அவரது பிறந்த நாள் மற்றும் உயிர்த்தியாக தினத்தை நகர அருங்காட்சியகத்தின் ஒரு மூலையில் நடத்துவதில் ஏதேனும் அர்த்தமுள்ளதா ? தேசப் பிதாவுக்கு உரிய மரியாதை செலுத்தவும், அத்தகைய நிகழ்வுகளை காந்தி மண்டபத்தில் தகுந்த முறையில் நடத்தவும் முதல்வரிடம் நான் பலமுறை விடுத்த கோரிக்கைகள் பிடிவாதமான மறுப்பை சந்தித்தன. காந்திஜி தனது வாழ் நாளில் திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்று பவர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டு கேலி செய்யப்பட்டார். ஆனால் இன்றும் அவர் தொடர்ந்து கேலி செய்யப்பட வேண்டுமா?" என கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: பட்டியல் சமூகத்திலிருந்து முதல்வர் வர வேண்டும்.. ஆளுநர் ஆர்.என். ரவி அதிரடி சரவெடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share