×
 

மது பிரியர்களே... பிப் 11-ம் தேதி டாஸ்மாக் கடைகள் இயங்காது..அரசு அறிவிப்பு

வருகின்ற பிப்ரவரி 11-ம் தேதி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப் படுவதாகவும் விதிகளை மீறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் மது விற்பனை என்பது சற்று அதிகரித்த முனையிலேயே இருந்து வருகிறது. அரசன் கணக்குப்படி தமிழகத்தில் மொத்தம் 4 ஆயிரத்து 829 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. அதன்படி பார்த்தால் ஒரு நாளுக்கு சராசரியாக 100 அல்லது 100 முதல் 120 கோடி ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது.

இந்த கணக்கு விழா காலங்களில் இரு மடங்காக உயர்ந்து கிட்டத்தட்ட 150 கோடி ரூபாய் அளவிற்கு விற்பனையாகிறது. ஏன் இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தின் வருமானத்தில் தலைமை இடத்தை மது விற்பனை துறையே பிடித்திருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா.. ஆம் மது விற்பனை தமிழகத்திற்கு வருமானத்தை அள்ளிக் கொடுக்கும் துறையாகவே இன்று வரை செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு அரசு விடுமுறைகள் கிடைத்தாலும் டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 9 நாட்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது காந்தி ஜெயந்தி, குடியரசு தின விழா, மிலாது நபி, திருவள்ளுவர் தினம், வடலூர் ராமலிங்கம் நினைவு நாள், மே தினம், சுதந்திர தினம் உள்ளிட்ட ஒன்பது நாட்களுக்கு மட்டுமே விடுமுறை கிடைக்கின்றது.

இதையும் படிங்க: ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது.. வந்தே பாரத் ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.!

இந்நிலையில் பிப்ரவரி 11-ம் தேதி சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை( கடைகள் மற்றும் பார்கள்) 2003 விதி படி மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981 விதி 2511(a) ஆகிய விதிகளின் கீழ்,

சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த எஃப் எல் 2 உரிமம் கொண்ட கிளப்புகளை சார்ந்த பார்கள், எஃப் எல் 3 உரிமம் கொண்ட ஹோட்டல்களை சார்ந்த பார்கள் மற்றும் எஃப் எல்AA மற்றும் எஃப் எல்11 ஆகிய உரிமங்களைக் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட வேண்டும் என்றும் மது விற்பனை செய்யக்கூடாது என்றும் அறிவிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்கள் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். 

மேலும் விதியை மீறி மது விற்பனையில் ஈடுபட்டால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ன சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: பட்டாசு கிளப்பும் திமுகவினர்..! அண்ணா அறிவாலயத்தில் களைகட்டியது கொண்டாட்டம்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share