அந்தமாதிரி நேரத்தில் கள்ளக்காதலியுடன் சிக்கிய கணவன்.. மனைவிக்கு பயந்து ஜன்னல் வழியே குதித்து ஓட்டம்..!
தெலுங்கானாவில் கள்ளக்காதலி வீட்டில் உல்லாசமாக இருந்த கணவரை, மனைவி கையும் களவுமாக பிடித்த நிலையில், கணவன் ஜன்னல் வழியே எகிறி குதித்து ஓடிய சம்பவம் அரங்கேறி உள்ளது.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் எல்.பி.நகரை சேர்ந்தவர் பிரசாந்த். அவரது மனைவி ஸ்வேதா. இவர்கள் இருவரும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஸ்வேதாவின் தந்தை அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்தார். தீடீர் உடல்நலக்குறைவால் அவர் பணியின் போதே இறந்தார். அதனால் அவர் இறந்த பிறகு ஸ்வேதாவிற்கு கருணை அடிப்படையில் அரசு பள்ளி ஆசிரியர் பணி வழங்கப்பட்டது. இதனால் ஸ்வேதா தனது தந்தையின் வேலையைப் பெற்றார். அரசு பணி மற்றும் நிறைவான மாத சம்பளம் என்பதால் இவர்களது குடும்ப வாழ்க்கை நன்றாகப் போய்க் கொண்டிருந்தது.
இந்த நிலையில் பிரசாந்திற்கு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணி புரியும் வாணி பெண்னுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடையில் அவர்களது நட்பு காதலாக கனிந்து, கசிந்து உருகி ஓடி உள்ளது. இருவரும் கணவன், மனைவி போலவே உல்லாசமாக வாழ்ந்துள்ளனர். இந்த திருமணத்திற்கு புறம்பான உறவாகவால் பிரசாந்த் தனது வீடு, குடும்பம், மனைவி, குழந்தைகளை மறந்துவிட்டு தன் காதலியுடன் நேரத்தை செலவிட ஆரம்பித்தார். நாளடையில் தனது கணவரின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்தைக் ஸ்வேதா கவனித்துள்ளார். முன்பு போல அன்பாக பேசுவது இல்லை. அதிக நேரம் உரையாடுவது இல்லை. குழந்தைகளோடு பழகுவது இல்லை எனக்கேட்டு அவரிடம் சண்டை பிடித்துள்ளார்.
இதையும் படிங்க: தொட்டா நீ கெட்ட.. வாட்ஸ் அப்பில் வரும் வீடியோ கால்.. சைபர் கிரைம் மோசடியில் சிக்கிய எம்.எல்.ஏ..!
ஆனால் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. தான் எப்போதும் போலவே உள்ளதாக பிரசாந்தும் சமாளித்துள்ளார். ஆனால் அவரது பதில் ஸ்வேதாவுக்கு திருப்தி தரவே இல்லை. இதனால் அவரது நடமாட்டத்தில் கவனம் செலுத்தினார் ஸ்வேதா. கணவன் எங்கு செல்கிறார். எப்போ வருகிறார். மொபைலில் யாரிடம் பேசுகிறார் என்பதை கண்காணிக்க துவங்கி உள்ளார். பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பது போல திருமணத்திற்கு புறம்பான உறவில் பிரசாத் ஈடுபட்டு வருவதை ஸ்வேதா கவனித்தார். அடுத்த முறை பிரசாந்த் வெளியே சென்ற போது அவரைப் பின்தொடர்ந்து சென்றார்.
தன்னை மனைவி பின் தொடர்வதை அறியாத பிரசாந்த், ஹாயாக, ஹயாத் நகரின் புறநகர்ப் பகுதியான லக்ஷ்ம ரெட்டி பாலத்தில் இருந்த கள்ளக்காதலி வாணி விட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தான் பிரசாந்த் வாணியுடன் தங்கியிருப்பதைக் ஸ்வேதா கண்டுபிடித்தார். இதனையடுத்து அந்த வீட்டிற்கு ஸ்வேதா தனது பிள்ளைகளுடன்சென்றார். தனது காதலியுடன் பிரசாந்த் ஜாலியாக இருந்துள்ளார். அப்போது தீடீரென மனைவியின் சத்தம் கேட்ட பிரசாந்த் யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து கையில் செருப்புகளைப் பிடித்துக்கொண்டு சுவர் ஏறிக் குதித்து தப்பி ஓடினார்.
இதனால் அந்த வீட்டில் இருந்த வாணியை கையும் களவுமாக பிடித்த ஸ்வேதா ஆத்திரம் தீர தாக்கினார். தனது தந்தை இறந்த பிறகு வியாபாரம் செய்வதாக கூறி பணம் பெற்ற பிரசாந்த், அதில் வாணிக்கு ₹30 லட்சம் பணம், ஒரு கார், ஒரு ஸ்கூட்டி மற்றும் தங்கம் ஆகியவற்றைக் கொடுத்துள்ளதாக ஸ்வேதா குற்றம் சாட்டினார். இதுகுறித்து ஹயத்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மனைவி பணத்தில் கள்ளக்காதலிக்கு நகை, கார், ஸ்கூட்டி என வாங்கிக்கொடுத்தது வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சுரங்கத்திற்குள் சிக்கிய தொழிலாளர்கள் மரணம்.. ஒருவார கால போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீட்பு.. உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு..