செஞ்சுரி அடித்த சென்னை வெயில்... மழை பெய்ய வாய்ப்பு இருக்கா? வானிலை மையம் சொல்வது என்ன?
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் வெயில் 100 டிகியை கடந்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மதிய நேரங்களில் வாகன ஓட்டிகள் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகியை கடந்திருக்கிறது. குறிப்பாக இன்று சென்னையில் வெயில் 102.6 டிகிரி ஃபாரான்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் வெயில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
வேலூரில் 103.5 டிகிரி ஃபாரன்ஹீட், ஈரோடு-103.3 டிகிரி ஃபாரன்ஹீட், சென்னை விமான நிலையம்-102.6 டிகிரி ஃபாரன்ஹீட், சேலம்-102.7 டிகிரி ஃபாரன்ஹீட், தருமபுரி-102.2 டிகிரி ஃபாரன்ஹீட், திருசிராப்பள்ளி விமான நிலையம்-102.0 டிகிரி ஃபாரன்ஹீட், கோயம்புத்தூர்-100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. யிருக்கிறது. வெயில் காரணமாக மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியிருக்கின்றனர்.
இதையும் படிங்க: அடுத்த 3 நாட்களுக்கு அனாவசியமா வெளிய போகாதீங்க.. வெயில் அடி வெளுக்கப்போகுது.. ஜாக்கிரதை..!
முன்னதாக வானிலை மையம் வெளியிட்டுள்ள் அறிவிப்பில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை வறண்ட வானிலை நிலவக்கூடும். 31 ஆம் தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஏப்.01 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏப்.02 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏப்.03 மற்றும் ஏப்.04 ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: வாட்டி வதைக்கும் வெயில்... குட் நியூஸ் சொன்ன வானிலை மையம்!!