×
 

கையில் துப்பாக்கி.. குரூர புத்தி.. மக்களை சுட்டப்படியே ஓடும் தீவிரவாதியின் முதல் புகைப்படம்..!

ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் கையில் துப்பாக்கியுடன் தீவிரவாதி ஓடும் முதல் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

ஜம்மு காஷ்மீரில் உள்ள பகல்காம் என்ற இடத்தில் சுற்றுலா பயணிகள் மீது கண்மூடித்தனமாக தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தக் கோர தாக்குதலுக்கு உலக நாடுகளே கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தினார். தீவிரவாத தாக்குதலுக்கு ஆளாகாமல் மக்களை பாதுகாப்பது தொடர்பாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாகவும், தீவிரவாத தாக்குதலை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதையும் படிங்க: நிலைக்குலைய வைத்த தீவிரவாத தாக்குதல்..! கரம் கொடுக்கும் சவுதி அரேபியா..!

இந்த நிலையில் சுற்றுலாப் பயணிகள் மீது கொடூரமான முறையில் துப்பாக்கி சூடு நடத்தி கொன்ற நிலையில், மக்களை சுட்டப்படியே தீவிரவாதி ஓடும் முதல் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இணையதளத்தில் இந்த புகைப்படம் வெளியாகி அனைவரையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: தீவிரவாத தாக்குதல் எதிரொலி..! அவசர கதியில் நாடு திரும்பும் பிரதமர் மோடி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share