தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் தொடக்கம்... 5300 ஆண்டுகளுக்கு முன்னரே இரும்பு அறிமுகம்.. முதலமைச்சர் பெருமிதம்
தமிழ் நிலப்பரப்பில் இருந்தே இரும்பின் தொடக்கம் அமைந்துள்ளது, 5300 ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கியுள்ளது என்பதை பெருமையுடன் சொல்வதாக இரும்பின் தொன்மை நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் பேசினார்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இரும்பின் தொன்மை நூல் வெளியிடுதல், கீழடி திறந்தவெளி மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா தொடங்கியது, இந்த விழாவில் பேசியதாவது,...
”5300 ஆண்டுகளுக்கு முன்னாடி உருக்கு இரும்பு தொழில் நுட்பம் உருவாகியுள்ளது. கி.மு.4000 த்தில் இரும்பு உருவானதாக சொல்கிறார்கள்,. தமிழ் நாட்டில் 5300 ஆண்டுக்கு முன்னர் இரும்பு அறிமுகமாகியுள்ளது. கீழடியில் கிடைத்த தொல்லியல் மாதிரிகளை அமெரிக்க ஃப்ளோரிடா மாநில தொல்லியல் ஆய்வுக்கூடம், உள்ளிட்ட 3 முக்கிய ஆய்வுக்கூடங்களுக்கு மாதிரிகளை அனுப்பி வைத்தோம். மூன்று நிறுவனங்களும் ஒரே பகுப்பாய்வை முடிவுகளை அனுப்பியுள்ளன. பகுப்பாய்வு முடிவுகளை தொகுத்து இரும்பின் தொன்மை என்கிற நூலை வெளியிட்டுள்ளோம்.
அண்மைக்கால அகழாய்வு முடிவுகள் வாயிலாக தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவில் மட்டுமல்ல, உலகளவில் இரும்புத் தாதுவில் இருந்து இரும்பினைப் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் தமிழ்நிலப்பரப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 5300 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் நிலப்பரப்பில் இரும்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிவியல் அடிப்படையில் நிறுவியுள்ளோம்.
இதையும் படிங்க: களத்தில் விஜய்... கலக்கத்தில் ஸ்டாலின்... ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கி வரும் தவெகவினர்...
இது தமிழுக்கும் - தமிழினத்துக்கும் - தமிழ்நாட்டுக்கும் - தமிழ் நிலத்துக்கும் பெருமை. உலக மானுட இனத்துக்கு தமிழ்நிலம் வழங்கும் மாபெரும் கொடை என்றே இதனை நாம் கம்பீரமாகச் சொல்லலாம். இந்தியாவின் வரலாறு இனி தமிழ் நிலத்தில் இருந்து தான் எழுதப்பட வேண்டும். அதனை மெய்ப்பிக்கும் ஆய்வுகளை தமிழ்நாடு தொல்லியல் துறை தொடர்ச்சியாகச் செய்து வருகிறது"
கல்தோன்றி மண்தோன்றா காலத்தில் முன் தோன்றிய மூத்தக்குடி தமிழ்குடி என்பதை நிருபித்துள்ளோம். இந்தியாவின் வரலாறு தமிழத்திலிருந்தே தோன்றியுள்ளது என்பதை பலமுறை கூறியுள்ளேன். இது இலக்கிய புனைவுகள் அல்ல வரலாற்று ஆவணங்கள்.
அன்மைக்கால அகழாய்வுகள் வாயிலாக இரும்பை பிரித்தெடுக்கும் தொழிநுட்பம் தமிழ் நிலப்பரப்பில் 5300 ஆண்டுகளுக்கு முன் இருந்ததை அறிவியல் தொழில்நுட்பத்தோடு உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது என்பதை பெருமையுடன் சொல்கிறேன். இது நான் ஆளும் காலத்தில் கிடைத்திருப்பது பெருமை. உலகிற்கே வழிகாட்டும் சமூகமாக தமிழ் சமூக அமைந்திருப்பதை உலகுக்கு நாம் சொல்லியாகவேண்டும். பழம் பெருமை பேசுவது புதிய சாதனை படைக்க ஊக்கமாக அமைய வேண்டும். தமிழ்நாட்டில் நகர நாகரிகமும் எழுத்தறிவும் கி.மு. 6 நூற்றாண்டில் தொடங்கியது என்பதை கீழடி அகழாய்வு முடிவுகள் நிறுவியுள்ளன.
பொருநை ஆற்றங்கரையில் 3200 ஆண்டுகளுக்கு முன்னர் வேளாண் பயிர்தொழிலில் நெல்பயிரிடப்பட்டுள்ளது என்பதை சிவகளை அகழாய்வு முடிவுவெளிப்படுத்தியது. தமிழ்நாட்டின் இரும்பின் அறிமுகம் 4600 ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததை கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை அகழாய்வின் மூலம் தமிழ்நாடு சட்டமன்றத்தின்வாயிலாக நான் உலகிற்கு அறிவித்தேன்.
தமிழ் - தமிழ் நிலம் - தமிழ்நாடு குறித்து நாம் இதுவரை சொல்லி வந்தவை ஏதோ இலக்கியப் புனைவுகள் அல்ல, அரசியலுக்காகச் சொன்னவை அல்ல, வரலாற்று ஆதாரங்கள். உலக அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவை என்பதை மெய்ப்பிக்க வேண்டிய கடமையை இந்த அரசு எடுத்துக் கொள்கிறது"
இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் டாஸ்மாக் மட்டும்தான் சக்சஸ்.. திமுக அரசின் தோல்விகளைப் பட்டியலிட்ட அண்ணாமலை!