திமுக - தவெக இடையில தான் போட்டியே... விஜய் அதிமுகவை சீண்டாதது ஏன்..? ரகசியம் உடைத்த கே.பி.முனுசாமி..!
திமுக - தவெக இடையில தான் போட்டி என்று விஜய் சொன்னது சரிதான். மனதில் பட்டதை, அவர் மனதில் பட்ட காயங்கள், அந்த காயத்தினுடைய வெளிப்பாடு அது.
''விஜய் சொன்னது சரிதான்... திமுக - தவெக இடையில தான் போட்டியே'' என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
திமுக - தவெக இடையில தான் போட்டி என்று விஜய் சொன்னது சரிதான். மனதில் பட்டதை, அவர் மனதில் பட்ட காயங்கள், அந்த காயத்தினுடைய வெளிப்பாடு அது. அதிமுக ஆட்சியில் இருந்தபோது அப்போதும் அவர் நடித்துக் கொண்டிருந்தார். அவரது படம் வெளி வரும்போது எந்தவித சிரமமும் இல்லாமல் படம் வெளி வந்து கொண்டு இருந்தது.
ஆனால் அதே நடிகர் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு படத்தில் நடித்து வெளியிடுவதற்கு எவ்வளவு சிரமப்பட்டார். யாரையெல்லாம் போய் பார்த்தார். அந்த படத்தை விநியோகம் செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட நிர்வாகத்திற்கு கொடுக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து, காரணத்தினால் அதற்கு அவர் மனம் புண்பட்டு இருக்கிறது, வேதனைப்பட்டு இருக்கிறது.
இதையும் படிங்க: தம்பி விஜய்க்கு எங்களைப் பற்றி நல்லா தெரியும்... திமுகவின் கரிசனம் அதிமுகவுக்கு தேவையில்லை - சிதறவிடும் செல்லூரார்..!
தான் செய்கின்ற தொழிலுக்குக்கூட இவ்வளவு இடைஞ்சல் கொடுக்கிறார்கள் இந்த திமுகவினர் என்று வெம்பியதன் காரணமாக அந்த நிலைப்பாட்டின் காரணமாக மேடையிலே அவர் அதைச் சொல்லி இருக்கிறார். அவரது சிந்தனை, அரசியல் வெளிப்பாடு அல்ல. அவர் நீண்ட காலமாக மனதிலே இருக்கின்ற வருத்தத்தை, கோபத்தை வெளிக்காட்டி இருக்கிறார். அந்த கோபமும், வருத்தம் முழுவதும் திமுக தலைமை மீது இருக்கிறது. அதனால் தான் அவர்களுக்கும் தனக்கும் போட்டி என்று சொல்லி இருக்கிறார்.
நாங்கள் அவர்களுக்கு முழு பாதுகாப்பு கொடுத்தோம், முழு ஆதரவு கொடுத்தோம். அதனால் தான் எங்களை மறந்து விட்டார். அதனால், அவர் அங்கிருந்து விடுபட்டு அரசியலுக்கு வந்து இந்த கருத்தை சொன்னார் என்றால் அவர் இந்த கருத்தை சொல்வதற்கு உரிமை இருக்கிறது'' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 2026 தேர்தலில் தவெக vs திமுகவிற்கும்தான் போட்டி: விஜய் பேச்சுக்கு இ.பி.எஸ் கொடுத்த ரியாக்ஷன்.!