ஆண்டின் முதல் பூகம்பம் ..அதிகாலையில் அதிர்ந்த திபெத்.. 6 நிலநடுக்கத்தில் 60 பேர் பலி ..!
நேபாளம் – திபெத் எல்லையில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 60 பேர் உயிரிழந்தனர்
2025 ஆம் ஆண்டின் முதல் பூகம்பம் நிகழ்ந்துள்ளது நேபாளத்தின் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.1ஆக பதிவாகியுள்ளது.அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் அறிவிப்பின் படி, நிலநடுக்கத்தின் மையம் லோபூச்சிக்கு வடகிழக்கே 93 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது இந்திய நேரப்படி 06:35:16 மணிக்கு நிகழ்ந்தது, இதனால் அந்த பகுதியில் பரவலான அதிர்வை உருவாக்கியது. நில அதிர்வு நேபாளத்தில் மட்டுமல்லாமல் . டெல்லி, ஹரியானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பீகார் உட்பட வட இந்தியாவின் பல பகுதிகளில் வலுவான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
தொடர்ந்து, 6 நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டன. இதனால் பல பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கின. இதில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 62 பேர் காயமடைந்தனர். இவர்களில், மேற்கு சீனாவில் 9 பேர் உயிரிழந்து உள்ளனர்.இதன் தாக்கம், அருகிலுள்ள இந்தியா, நேபாளம் மற்றும் பூடான் ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டு உள்ளது. வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களில் இருந்த மின்விசிறி, விளக்குகள் நிலநடுக்க பாதிப்பால் லேசாக அசைந்தன.
இதனை தொடர்ந்து, டெல்லி, பீகார் போன்ற மாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. பீகாரில் தலைநகர் பாட்னா, முசாபர்பூர், மோதிஹாரி மற்றும் பெட்டையா மாவட்டங்களிலும் உணரப்பட்டது. திபெத்தின் ஷிகத்சே நகரிலும் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.டெல்லி-என்.சி.ஆர். மற்றும் வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் கடுமையான அதிர்வுகள் உணரப்பட்டன. மேற்கு வங்காளம் மற்றும் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது
திபெத்தை மையமாகக் கொண்ட 2025 ஆம் ஆண்டின் முதல் நிலநடுக்கம்' மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தொடர்ந்து உயிர் இழப்பு அதிகரிக்கக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன
இதையும் படிங்க: #BREAKING திபெத் - நேபாளம் எல்லையில் பயங்கர நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 53 ஆக உயர்வு!
இதையும் படிங்க: தண்ணியில கண்டம்... பிரம்மபுத்ரா நதியில் சீனா கட்டும் வல்லரசு அணை... இந்தியாவை அழிக்க இப்படியொரு சதியா..?