முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியும் தப்பவில்லை! பெரியதொகைக்கு ஆசைப்பட்டு ரூ.90 லட்சத்தை இழந்தார்
ஆன்-லைன் வாயிலாக நடக்கும் பல்வேறு மோசடிகள் குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
ஆன்-லைன் வாயிலாக நடக்கும் பல்வேறு மோசடிகள் குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இருப்பினும், சாமானியர்கள் சிக்கி பணத்தை இழப்பதோடு, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியும் இந்த மோசடியில் சிக்கி ரூ90 லட்சத்தை ஏமாந்துள்ளார்.
ஆன்-லைன் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் பன்மடங்காக பணத்தை திருப்பித் தருகிறோம் எனக் கூறி ரூ.90லட்சம் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியிடம் மோசடி செய்யப்பட்டுள்ளது
கடந்த 2024 டிசம்பர் 4ம் தேதியிலிருந்து டிசம்பர் 20ம் தேதிக்குள் இந்த மோசடி நடந்துள்ளது. எர்ணாகுளம் மாவட்டம், ஈழூர் அருகே நடம்மா பகுதியைச் சேர்ந்தவர் சசிதரன் நம்பியார்(வயது73). உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர்.
கடந்த டிசம்பர் 30ம் தேதி சசிதரன் நம்பியார் தி ஹில் பேலஸ் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் “ அயனா ஜோஸப் மற்றும் வர்ஷா சிங் ஆகிய இருவர் என்னிடம் ஒரு குறிப்பிட்ட முதலீட்டு நிறுவனத்தில் பணியாற்றுவதாகவும், எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் 850 சதவீதம் லாபம் கிடைக்கும் எனத் தெரிவித்தனர். இதற்கான ஒரு லிங்கையும் அனுப்பி வைத்து என்னை நம்ப வைத்தனர். இதையடுத்து அந்த இருவர் வழங்கிய பல்வேறு வங்கிக் கணக்குகளில் ஆர்டிஜிஎஸ், ஐஎம்பிஎஸ் முறையில் பலமுறை முதலீடு செய்து ரூ.90 லட்சம்வரை அளித்தேன். ஆனால் இதுவரை முதலீடும் திரும்பக் கிடைக்கவில்லை, லாபமும், வட்டியும் வரவில்லை” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரூ. 13 லட்சம் 'ஜானிவாக்கர் விஸ்கி' ஊழல்: கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்படுவாரா?
இதையடுத்து, தி ஹில் பேலஸ் போலீஸார் பாரதிய நியாய சன்ஹிதா(பிஎன்எஸ்) சட்டத்தின் கீழ் நம்பிக்கை மோசடி, மோசடி, ஐடி சட்டத்தின் கீழ் மோசடி ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். மோசடியில் ஈடுபட்ட இருவரின் உண்மையான பெயர் அதுவல்ல, அவர்கள் இருக்கும் இடத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியிடமே ரூ.90 லட்சத்தை ஆன்லைன் மோசடி செய்த இருவரையும் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.
இதையும் படிங்க: இரட்டை இலை வழக்கில் அதிமுகவிற்கு நிவாரணம்...மீண்டும் மீண்டும் மோதும் நீக்கப்பட்ட டீம் மேட்ஸ்