2025ஆம் ஆண்டின் தரமான சம்பவம்..வாக்காளர் பட்டியலில் ஜராவா பழங்குடியினர்..!
2025 ஆம் ஆண்டின் மிக சிறந்த செயலாக அந்தமானின் பழமையான ஜராவா பழங்குடியினர் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் தெற்கு அந்தமான் மற்றும் நடு அந்தமானில் வாழும் பழங்குடி மக்களில் ஒரு பிரிவினர். ஜாரவா என அழைக்கப்படுகின்றனர் . மரபணு சோதனையில் இவர்கள் பசிபிக் தீவைச் சேர்ந்தவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தமான் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தாலும் இந்தியர்களின் மரபணு இவர்களின் உடலில் இல்லை. ஜாராவா பழங்குடி மக்களின் எண்ணிக்கை 250 முதல் 400 வரை இருக்கும் என கணக்கிட்டுள்ளனர். வெளி உலக தொடர்பின்றி தனிமையில் வாழும் தெற்கு அந்தமான் மற்றும் நடு அந்தமானின் மேற்கு பகுதியில் உள்ள அடர்ந்த காட்டில் வாழும் ஜாரவா மக்கள் விலங்குகளையும் அந்தமான் கடலில் மீன்களையும் வேட்டையாடி உண்டு வாழ்கின்றனர். மேலாடையின்றி வாழும் இம்மக்களின் எண்ணிக்கை பல்வேறு காரணங்களால் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகின்றது.ஜாரவா பழங்குடி மக்களை இந்திய அரசு பட்டியல் பழங்குடி மக்கள் இனத்தில் சேர்த்துள்ளது மேலும் இப்பழங்குடியின மக்களை பாதுகாக்க வேண்டிய மக்களாக இந்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டின் மிக சிறந்த செயலாக அந்தமானின் பழமையான ஜராவா பழங்குடியினர் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர் அந்தமானில் வசிக்கும் மிக பழைமையான பழங்குடியினத்தை சேர்ந்த ஜராவா சமூகத்தினர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டு 19 உறுப்பினர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அந்தமான்-நிகோபார் நிர்வாகத்தின் கடிமான உழைப்பால் இது சாத்தியமாகியுள்ளது. தலைமை செயலர் சந்திர பூஷண் குமார், ஜராவா சமூகத்தினருக்கு வாக்காளர் அட்டைகளை வழங்கினார்.
ஜராவா சமூகத்தினரின் தனித்துவமான அடையாளத்தை நிலை நிறுத்தவும், அவர்களின் தனியுரிமையை பாதுகாக்கவும் தேவையான விரிவான நடவடிக்கை எடுக்க நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம். அவர்களின் அன்றாட வாழ்வில் தலையீடு குறைவாக இருக்கும் வகையில் வாக்காளர் சேர்க்கை முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய குடிமக்களின் உரிமைகள் பற்றிய புரிதல் அவர்களுக்கு அதிகபட்சமாகவே உள்ளது. ஜராவா பழங்குடியினர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது இந்திய ஜனநாயக பரிணாம வளர்ச்சியில் ஒரு மிக முக்கிய சாதனை. மேலும், அனைத்து குடிமக்களின் சமத்துவத்தை உறுதி செய்வதற்கான நாட்டின் உறுதிப்பாட்டை இது எடுத்துக்காட்டுகிறது. என தெற்கு அந்தமான் மாவட்ட தேர்தல் அதிகாரி அர்ஜூன் சர்மா தெரிவித்துள்ளார்
இதையும் படிங்க: இங்கிலாந்து இளம்பெண்களிடம் பாலியல் பலாத்காரம்: "ஆசிய கும்பல்" அல்ல; பாகிஸ்தானியர்"; இந்திய பெண் எம்பி திட்டவட்டம்! எலான் மஸ்க் ஆதரவு..