தேர்வன்று திடீரென உயிரிழந்த தாய்.. மனதை ரணமாக்கிய மாணவனின் செயல்..!
12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய சிறுவனுக்கு நேர்ந்த சோகம் கேட்போரை கண்கலங்க வைத்துள்ளது.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய சிறுவனுக்கு நேர்ந்த சோகம் கேட்போரை கண்கலங்க வைத்துள்ளது. தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் 8,21,057 பேர் தேர்வெழுத அனுமதி சீட்டு பெற்றனர். அதில், சிறைவாசிகள், தனித்தேர்வர்கள் என பலரும் தேர்வு எழுதினர்.
இந்த பொதுத்தேர்வில் மொத்தமாக 145 சிறைவாசிகள் தேர்வு எழுதி வருகின்றனர். 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத மாநிலம் முழுவதும் 3,316 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. தேர்வு மையத்தை கண்காணிக்க 45 ஆயிரக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், 4800க்கும் மேற்பட்ட பறக்கும் படையினரும் தேர்வு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் முதல் நாளான இன்று மொழிப்பாடமாக தமிழ் தேர்வு நடைபெற்றது.
இதையும் படிங்க: இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகும்... கதறும் பெற்றோர்!!
இதில் மாநிலம் முழுவதும் 11,430 பேர் பங்கேற்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. தேர்வை எழுதிய மாணவ, மாணவிகள் தமிழ் தேர்வு எளிதாக இருந்ததாக தெரிவித்தனர். இந்த சூழலில், தாயை இழந்த மாணவன் ஒருவர், படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து பொதுத்தேர்வை எழுதியுள்ளார். நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியை சேர்ந்தவர் சுனில்குமார். இவரது தந்தை 6 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளார்.
சுனில் குமாரின் தாயும் நீண்ட நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். சுனில் குமார் இன்று பொதுத்தேர்வு எழுத தயாராகி கொண்டிருந்த போது, அவரது தாய் இறந்தார். இந்த சோகத்திலும் மனதை திடப்படுத்தி கொண்ட சுனில்குமார் பொதுத்தேர்வு எழுத சென்றுள்ளார். தேர்வு முடிந்ததும் தனது வீட்டுக்கு வந்தவர், தாய்க்கான இறுதி சடங்கை செய்தார். இது கேட்போரை கண்கலங்க வைத்துள்ளது.
இதையும் படிங்க: ராசிபுரம் பள்ளி மாணவன் மரண வழக்கில் திடீர் திருப்பம்..! சக மாணவனால் நேர்ந்த கொடூரம்