ஒரே போடு… இன்னும் 30 ஆண்டுகள் கைவைக்கக்கூடாது… மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம்..!
தென் மாநிலங்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவுகின்ற காரணத்தால் எங்களுடைய அந்த குரல்வலையை நெரிக்க கூடாது என்ற அடிப்படையில் இந்த எம்பிக்களின் எண்ணிக்கை அப்படியே தொடர வேண்டும்.
30 ஆண்டுகளுக்கு தொகுதி மறுவரையறைக்கான திட்டத்தை ஒத்தி வைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த அனைத்துக் கட்சிக் கூட்ட தீர்மானத்தின்படி, ‘கூட்டு நடவடிக்கைக் குழு’ அமைத்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தக் கூட்டத்தில் 30 ஆண்டுகளுக்கு தொகுதி மறுவரையறைக்கான திட்டத்தை ஒத்தி வைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. நியாயமான தொகுதி வரையறைக்கான கூட்டுக்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.
30 ஆண்டுகள் மக்களவைத் தொகுதி மறு வரையறை திட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும். நியாயமான தொகுதி வரையறைக்கான திட்டத்தை 30 ஆண்டுகள் ஒத்திவைப்பதை பிரதமரே அறிவிக்க வேண்டும். தென் மாநிலங்கள் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் குறைவான மக்கள் தொகையே இருக்கிறது. மக்கள் தொகை அடிப்படையிலேயே நீங்கள் தொகுதி மறுவரையறை செய்தால் அது பல மாநிலங்களுக்கு பெரும் பதிப்பாக, பின்னடைவாக இருக்கும். பாதிக்கப்படும் மாநிலங்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு நியாயமான, தார்மீக அடிப்படையில் ஒத்தி வைக்கப்பட வேண்டும்.
நாடாளுமன்ற எம்.பி., களின் எண்ணிக்கை தற்போது 543 ஆக இருக்கும் நிலையில் அந்த எண்ணிக்கையே அடுத்து முப்பது ஆண்டுகளுக்கும் தொடர வேண்டும் என்பதுதான் இந்தக் கூட்டுகுழுவில் கலந்து கொண்ட தலைவர்களில் கோரிக்கையாக இருக்கிறது. மன்மோகன் சிங் ஆட்சி காலத்திலும், அதற்கு முந்தைய ஆட்சிக் காலத்திலும் பாராளுமன்றத்தின் தொகுதியை கூட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது தென் மாநிலங்களின் மக்கள் தொகையை கணக்கில் கொண்டு இந்த கோரிக்கை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த கோரிக்கை இன்னும் அப்படியே உயிர்ப்புடன் இருக்கக்கூடிய காரணத்தால், தென் மாநிலங்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவுகின்ற காரணத்தால் எங்களுடைய அந்த குரல்வலையை நெரிக்க கூடாது என்ற அடிப்படையில் இந்த எம்பிக்களின் எண்ணிக்கை அப்படியே தொடர வேண்டும். இதில் அடுத்து 30 ஆண்டுகளுக்கு நீங்கள் எந்த மாற்றத்தையும் செய்யக்கூடாது என்கிற ரீதியில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
இதையும் படிங்க: #FairDelimitation மத்திய அரசு அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்டவேண்டும்.. ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் வலியுறுத்தல்..!