அமைச்சர் பொன்முடியை விடாமல் விரட்டிய இளைஞர்கள்... துரத்தி துரத்தி வாக்குவாதம்...!
திருக்கோவிலூரில் புதிய பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்ய சென்ற அமைச்சர் பொன்முடியை அங்கிருந்த நபர்கள் விரட்டி, விரட்டி சரமாரியாக கேள்விக் கேட்டதால் பரபரப்பு நிலவியது.
திருக்கோவிலூரில் புதிய பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்ய சென்ற அமைச்சர் பொன்முடியை அங்கிருந்த நபர்கள் விரட்டி, விரட்டி சரமாரியாக கேள்விக் கேட்டதால் பரபரப்பு நிலவியது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மானிய கோரிக்கையின் போது திருக்கோவிலூருக்கு புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அமைச்சர் நேரு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் திருக்கோவிலூர் பகுதிக்கு வந்த திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான பொன்முடி பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தினை ஆய்வு செய்தார். அப்போது அங்கு வந்த சிலர் பேருந்து நிலையம் அமைய உள்ள இடம் தனிநபருக்கு சொந்தமானது என்றும், ஐந்து ஏக்கர் நிலத்தை மட்டும் அரசுக்கு கொடுத்துவிட்டு சுற்றி உள்ள நிலத்தை விற்பனை செய்வதற்கு திட்டமிடுவதாகவும், இந்த இடம் பேருந்து நிலையம் அமைப்பதற்கு உகந்ததில்லை என அமைச்சரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: பொன்முடி மீது சேறு வீசியவருக்கு ஜாமீன்.. பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என அறிவுரை..!
அப்போது அவர்களிடம் அமைச்சர் இதே போன்றுதான் விழுப்புரத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க முற்பட்ட போதும் பொதுமக்களும் இது போன்ற நபர்களும் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் கலைஞரிடமே சென்று பேருந்து நிலையம் அமைய உள்ள இடம் ஏற்புடையது அல்ல என்று கூறிய போதும் நான் இந்த இடம் ஏதுவாக இருக்கும் என்று அப்போது தெரிவித்திருந்தேன். அதேபோல விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது புதிய பேருந்து நிலையம் அமைந்த பிறகு அந்த பகுதி எந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்ததோ, அதேபோல திருக்கோவிலூர் பகுதியில் இந்த இடத்தில் பேருந்து நிலையம் அமைந்த பிறகு இந்த இடமும் வளர்ச்சி அடையும் என்று கூறினார்.
கிட்டத்தட்ட பேருந்து நிலைய நுழைவு வாயிலின் இருந்து பேருந்து நிலையம் அமைய உள்ள இடமானது 300 மீட்டருக்கும் அப்பால் உள்ளதால், அந்த பகுதிக்கு வருவதற்கு வயதானவர்களால் முடியாது என அங்கிருந்தவர்கள் அமைச்சரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் நெடுந்தூரம் நடந்து சென்ற அமைச்சர் பொன்முடி அந்த இடத்தை பார்வை செய்துவிட்டு உடனடியாக இந்த இடத்திற்கு முன்பாகவே அதாவது பேருந்து நிலைய நுழைவாயிலுக்கு அருகாமையிலேயே பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்யுங்கள். அப்படி இல்லை என்றால் அருகாமையில் உள்ள வேறு இடத்தை தேர்வு செய்து உடனடியாக என்னிடம் அனுப்பி வையுங்கள் என்று அங்கிருந்த மாவட்ட ஆட்சியரிடமும் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளிடமும் தெரிவித்திருந்தார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: சிபிஐ நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான அமைச்சர் பொன்முடி.. இனி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்கக் கோரிக்கை..!