கேம்ப்ளிங்கில் 50 லட்சம் லாஸ்... அதுக்காக குழந்தைகள் என்ன பாவம் பண்ணாங்க.. நெஞ்சை உலுக்கிய நாமக்கல் சம்பவம்..!
நாமக்கல்லில் தனியார் வங்கி ஊழியரின் வீட்டில் 3 பேர் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல்லில் தனியார் வங்கி ஊழியரின் வீட்டில் 3பேர் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பதிநகரை சேர்ந்தவர் பிரேம்ராஜ். இவர் அங்குள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு மோகனப்பிரியா என்ற மனைவியும் பிரிநித்திராஜ் என்ற 6 வயது மகளும் இருந்துள்ளனர் வழக்கம் போல் வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்துள்ளனர்.
இதனால் வீட்டு கதை தட்டியுள்ளனர். அது திறக்காததால், அவர்கள் ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர். அப்போது வீட்டில் இரு குழந்தைகளும் பிரேம்ராஜின் மனைவியும் இறந்து கிடைப்பதை பார்த்துள்ளனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இரு குழந்தைகள் மற்றும் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: தந்தையை இரும்பு ராடால் அடித்த மகன்... துடிதுடித்து இறந்ததை வீடியோ எடுத்து ரசித்த கொடூரம்!!
பின்னர் அந்த வீட்டை சோதனையிட்டதில் கடிதம் ஒன்று கிடந்துள்ளது. பிரேம்ஜி எழுதியதாக கூறப்படும் அந்த கடித்தத்தில், ஆன்லைன் மூலம் கடந்த சில தினங்களில் ரூ.50 லட்சம் வரை இழந்துவிட்டேன். இதை யாரிடமும் சொல்ல எனக்கு தைரியமில்லை. எனவே நான்கு பேரும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துவிட்டோம். எங்களை மனித்துவிடுங்கள் என கூறியுள்ளார்.
ஆனால் வீட்டில் மோகனப்பிரியா மற்றும் அவரது இரு குழந்தைகளின் உடல்கள் மட்டுமே கிடைந்துள்ளது. வீட்டில் பிரேம்ராஜ் இல்லாததால் சந்தேகமடைந்த போலீசார் அவரது தொடர்பு கொண்டனர். ஆனால் பிரேம்ஜியின் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் என வந்தது. இதனால், அந்த மூன்று பேரும் கொலை செய்யப்பட்டார்களா என சந்தேகப்பட்ட போலீசார் மாயமான பிரேம்ராஜை தேடி வருகின்றனர். தற்கொலை செய்து கொள்ள போகிறோம் என கூறிவிட்டு, தப்பித்த பிரேம்ராஜை போலீசார் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: சொல்பேச்சை கேட்காத மனைவி... துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த கணவன்!!