×
 

புதுசு புதுசா தேர்தல் நேரத்தில் நாடகமாடுகிறது திமுக..! சீமான் விளாசல்..!

கச்சத்தீவு தீர்மானம் திட்டமிட்ட நாடகம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ஆஜராகினார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வு ஒழிப்பு சம்பந்தமாக நடத்தப்படும் அனைத்து கட்சி கூட்டம் திட்டமிட்ட ஏமாற்றும் வேலை, இது ஒரு நாடகம் என்று கூறினார்.

நீட் கொண்டு வந்தது காங்கிரஸ்.,அவர்கள் கூட இருந்தது தி.மு.க. அப்போதெல்லாம் எதிர்க்கவில்லை என்று கூறிய அவர், இப்போது தேர்தல் வரும் நேரத்தில் நீட் தேர்வை ஒழிக்க போவதாக நாடகமாடுகிறார்கள் என்றும் நீட் தேர்வை ஒழிக்க முடியாது எனக் கூறியவர்களும் அவர்கள்தான். இது அவர்களுக்கு உறுதியாக தெரியும். இதற்கு மாற்று வழி தான் யோசிக்க வேண்டும் எனவும் கூறினார்.

இதையும் படிங்க: என்னை சாக்கடையில தள்ளி முடிக்கப் பாக்குறீங்களா?... சீமான் ஆவேசம்...!

ஒரு தேர்வை கொண்டு வரும் போதே மாணவர்கள் பாதிக்கப்படுவார்களா என யோசித்து இருக்க வேண்டும் என்று பேசிய அவர், ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவு நாசமாகிவிடும் என்பது குறித்து எல்லாம் யோசித்திருக்க வேண்டும் என்றும் நம்முடைய மாநிலத்தில் அதிக மாணவ மாணவர்கள் நீட் தேர்வால் இறப்பதாகவும் கூறினார்.

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர் சோகமாக உள்ளது என்றும் அழுவது புலம்புவது போராடுவதை தவிர வேறு வழியில்லை எனவும் உரிமை இழப்பது உயிரை இழப்பது தமிழர், இதில் நமக்கான ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தவில்லை என் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

ஒருவன் தண்ணியடிப்பான், சலம்புவான். ஆடு, மாடுகளை திருடுவான். பெண்களை கையை பிடித்து இழுப்பான். திடீரென கோவிலில் திருவிழா வந்துவிட்டால் காப்பு கட்டிக் கொள்வான்., அதுபோல தான் இங்குள்ள கட்சிகள் தேர்தல் நேரம் வரும் போதெல்லாம் புதிய நாடகங்களை அரங்கேற்றுகிறார்கள் என விமர்சித்தார்.

இதையும் படிங்க: 18 ஆண்டுகளாக என்ன செய்தார்கள்..? ஓட்டுக்காக திமுகவின் கபட நாடகம்- சீமான் ஆவேசம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share