அமித் ஷா இனி தமிழகத்துக்கு அடிக்கடி வருவார்.. பாஜக ஆட்சியும் வரும்.. ஒரு முடிவில் இருக்கும் நயினார்.!!
2026ஆம் ஆண்டில் அனைவரும் ஒன்று சேர்ந்து திமுக ஆட்சிக்கு திண்டுக்கல் பூட்டு போட வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார்.
2026ஆம் ஆண்டில் அனைவரும் ஒன்று சேர்ந்து திமுக ஆட்சிக்கு திண்டுக்கல் பூட்டு போட வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார்.
திண்டுக்கல்லில் பாஜக சார்பில் திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை மாவட்ட கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில்,"இரட்டை இலையும், தாமரையும் உறுதியான, இறுதியான கூட்டணி ஆகும். அதில் யார் யாருக்கு எவ்வளவு பங்கெடுப்பு என்பது குறித்து தேவை எதுவும் இல்லை. இது குறித்து இணையதளத்தில் பகிர்ந்துகொண்டிருப்பதால் எந்தப் பிரச்சினையும் வந்து விடக் கூடாது. திமுகவை ஆட்சியில் இருந்து அப்புறப் படுத்த வேண்டியதுதான் நமது முக்கிய வேலை. அதுதான் மிகவும் முக்கியம்.
யார் யாருக்கு எவ்வளவு, தேசிய ஜனநாயக கூட்டணியில் பங்கு வகிக்கும் கட்சிகள் குறித்தெல்லாம் அமித் ஷாவும், இபிஎஸ்ஸும் பார்த்துக் கொள்வார்கள். எனவே, சமூக வலைதளங்களில் நம்முடைய பதிவுகள் நாகரிகமாக இருக்க வேண்டும். நம்முடைய கட்சியைச் சேர்ந்தவர் ஒரு பதிவு போட்டால் அது நியாயமாக இருக்கும் என அனைவரும் மதிக்க வேண்டும். நான் இங்கு தலைவராக இல்லை. தலைமை தொண்டனாகதான் இருக்கிறேன்.
இந்த முறை தமிழக சட்டப்பேரவைக்கு பாஜகவைச் சேர்ந்த அதிக எம்எல்ஏக்கள் செல்வார்கள். தேசிய ஜனநாயக ஆட்சி இபிஎஸ் தலைமையில் நடைபெறும். இந்தியா ஓர் ஆன்மிக நாடு. இங்கு வேதங்கள் முழங்க வேண்டும். நாட்டில் மழை பெய்து செழிப்பாக இருக்க வேண்டும். அதற்கு வேதங்கள் முழங்க வேண்டும்.
தமிழக முதல்வர் தமிழ்நாடு அரசு மத்திய அரசு கண்ட்ரோலில் இருந்து அவுட் ஆப் கண்ட்ரோலில் சென்றுள்ளது எனக் கூறியுள்ளார். நம்முடைய உழைப்பில் 2026-இல் திமுக தமிழ்நாட்டை விட்டு அவுட் ஆப் கண்ட்ரோலில் போக வேண்டும். அதுவே, என்னுடைய எண்ணமும் செயலாகவும் இருக்கும். எந்த ஷா வந்தாலும் இங்கு ஒன்றும் செய்ய முடியாது என தமிழக முதல்வர் கூறியுள்ளார். ஷா சென்ற ஹரியானா, மகாராஷ்டிரா, டெல்லி ஆகியவற்றில் பாஜக ஆட்சி அமைத்தது. இனி அடிக்கடி தமிழ் நாட்டுக்கு வருவார், தமிழ்நாட்டிலும் பாஜக ஆட்சிக்கு வரும். அது அவருடைய பொறுப்பு. 2026-ல் அனைவரும் ஒன்று சேர்ந்து திமுக ஆட்சிக்கு திண்டுக்கல் பூட்டு போட வேண்டும்" என்று நயினார் நாகேந்திரன் பேசினார்.
இதையும் படிங்க: காங்கிரஸைப் பார்த்து பாஜகவுக்கு மிரட்சி.. பாஜகவின் பழிவாங்கும் அரசியலை தோலுரித்த டி.ஆர். பாலு!
இதையும் படிங்க: கையாலாகாத திமுக அரசு.. எப்பவுமே தப்ப மறைக்க தான் பார்க்குது.. மூக்குடைத்த அண்ணாமலை..!