×
 

இன்று "இன்டர் நேஷனல் ஹக் டே" (கட்டிப்பிடி தினம்) : ஒரு முறை "ஆரத் தழுவினால்..." தம்பதியருக்கு மகிழ்ச்சி செய்தி!

சர்வதேச குழந்தைகள் தினம், பெற்றோர் தினம், காதலர் தினம் என பல்வேறு தினங்கள் உலக அளவில் கொண்டாடப்பட்டு வருகின்றன.

இன்று ஜனவரி 21ஆம் தேதி அன்று சர்வதேச கட்டி அணைக்கும் தினமாக (இன்டர்நேஷனல் ஹக் டே) கொண்டாடப்பட்டு வருகிறது.

அன்பை வெளிப்படுத்தும் அணைப்பு, மன அழுத்தத்தை குறைக்கும் மருந்தாகவும் பார்க்கப்படுகிறது. அதை உணர்த்தும் வகையில், ஒருவரை ஒருவர் அன்புடன் ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்தும் வகையில் இந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. 

இதையும் படிங்க: பிராமண இளம் தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால், ரூ.1 லட்சம் பரிசு: சர்ச்சை எழுந்ததால், அதிகாரி விளக்கம்...

இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் எதற்கெடுத்தாலும் அவசரம். தனது அன்பிற்கு உரியவர்களுடன் சில மணி நேரமாவது செலவிட்டு அன்பை வெளிப்படுத்துவதற்கு சரியான நேரத்திற்காக காத்திருக்காதீர்கள்! 

அதற்காகத்தான் இது போன்ற கட்டி அணைப்பு தினங்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. உங்கள் அன்புக்கு உரியவரை காதலுடன் கட்டி அணைத்தால் இணையருடன் நெருக்கம் கூடும். பிணைப்பு வலுவாகும். 'இதன் காரணமாக "செரடோனின் ஹார்மோன்" சுரப்பதால் புதிய உற்சாகமும் கிடைக்கும். உணர்வுகளை பரிமாறிக் கொள்ளவும் உதவும்" என்று உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். 

"உடல் வலி குறைந்து மனசு ரிலாக்ஸ் ஆகும்; மனசோர்வு நீங்கும் இதயம் இதமாகும்; நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்; கவலை, பதற்றம்  மரணம் பற்றிய அச்சம் குறையும் என்பதும் கூடுதல் தகவல்!

சிறிது நேரம் பிரிவுக்கு பிறகு ஒரு அன்பான அரவணைப்பு நிச்சயம் தேவை. அது ஆறுதல் அரவணைப்பாக இருந்தாலும், உறுதி மற்றும் அன்பின் சக்தி வாய்ந்த பரிமாற்றமாக விளங்குகிறது. நேர்மறை உடல் தொடுதல் நம் காதல்களில் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் எவ்வாறு உருவாக்குகிறது என்பதை புரிந்து கொள்வது அவசியம்.

 இதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் தேசிய கட்டிப்பிடி தினம் என்கிற அரவணைப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு செவ்வாய்க்கிழமை அன்று இந்த தினம் வந்துள்ளது. 1986 ஆம் ஆண்டு  மிக்சிகனில் உள்ள காரோவில் ரெவ் கெவின் ஜபோர்னி என்பவர் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உடல் தொடுதல் மூலம் பாசத்தை வெளிப்படுத்தும் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக இந்த யோசனையை அறிவித்தார். அதைத்தொடர்ந்து கட்டிப்பிடி தினம் கொண்டாடப்பட்ட வருகிறது.

மக்கள் உடல் ரீதியான தொடுதலை கற்றுக் கொள்ளவும், தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படையாக உணர்த்தவும், அவர்கள் ஒருவருக்கு ஒருவர் எந்த அளவுக்கு நேசிக்கிறார்கள் மற்றும் அக்கறை காட்டுகிறார்கள் என்பதை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதுதான் அவருடைய பார்வையாக இருந்தது. 

அணைப்புகளுக்கு நம் அன்புக்கு உரியவர்களிடம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஆற்றல் உண்டு. உடல் ரீதியாக தங்களின் அன்புக்கு உரியவர்களை சுற்றி இருக்கும் அதிர்ஷ்டசாலிகளுக்கு அவர்களிடம் ஓடிச் சென்று அவர்களை விசேஷமாக உணரும் வகையில் இறுக்கமான அரவணைப்பை கொடுக்க பரிந்துரைப்பதாகவும் பேட்டி வண்டியில் அவர் கூறியிருந்தார்.

 நேசத்துக்கு உரியவர்கள் வெளியிடங்களில் இருந்தாலும் அவர்களுக்கும் மெய்நிகர் அரவணைப்பு பற்றிய குறிப்புகளை எழுதி அனுப்பவும்; உங்களுக்கு அவர்கள் எந்த அளவுக்கு அர்த்தம் நிறைந்தவர்கள் என்பதை  தெரியப்படுத்தவும் இந்த தினத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்!

தகவல் தொடர்பு மற்றும் சமூக ஊடகங்களின் தாக்கம் காரணமாக இன்றைய அவசரகால உலகம் உள்ளங்கை அளவிற்கு சுருங்கி வந்துள்ளது. இதன் காரணமாக வெளிநாடுகளில் பிரபலமாக கொண்டாடப்பட்டு வரும் இது போன்ற விசேஷ தினங்கள் தற்போது நமது நாட்டிலும் மெல்ல மெல்ல அடியெடுத்து வைக்கின்றன.

என்ன... நீங்களும் கட்டிப்பிடி தினத்துக்கு தயாராகி விட்டீர்களா!?

இதையும் படிங்க: இரண்டு விபத்துகளில் இருவர் பலி, காசிமேட்டில் கொலை- புத்தாண்டு நள்ளிரவு நிகழ்வுகள்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share