×
 

குழந்தைகளை பாதிக்கும் தக்காளி காய்ச்சல்.. சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை..!

தக்காளி காய்ச்சல் பரவ துவங்கியிருப்பதால் முன்னெச்சரிக்கை அவசியம் என பொது சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் முதன் முதலாக கண்டறியப்பட்ட ஒரு புதிய வகை காய்ச்சல் தான் இந்த தக்காளி காய்ச்சல். தற்போது இந்தியா முழுவதும் பரவி பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. 

முக்கியமாக ஒரு வயது முதல் 9 வயது வரையிலான குழந்தைகளை அதிக அளவில் தக்காளி காய்ச்சல் பாதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உடல் முழுவதும் தோன்றும் பிரகாசமான சிவப்பு கொப்பளங்களில் இருந்து தக்காளி காய்ச்சல் என்று கூறப்பட்டது. அதுமட்டுமில்லாமல் இது தக்காளி அளவுக்கு வளரக்கூடியது என்றும் கூறுகின்றனர்.தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆரம்ப அறிகுறிகள் சிக்குன்குனியாவை போலவே இருக்கும்.

இதையும் படிங்க: இந்தியப் பொருட்களுக்கு வரி விதித்த ட்ரம்ப்.. மெளன விரதத்தில் மோடி.. வெளுத்து வாங்கும் எதிர்க்கட்சி.!!

முதலில் தொண்டை வலி ஏற்பட்டு ஓரிரு நாட்களில் காய்ச்சலாகவும் பின்பு கை, கால் மற்றும் பாதங்களில் கொப்பளம், அரிப்புடன் சிவப்பு நிறத்தில் மாறுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஒரு சிலருக்கு மூட்டு வலி, உடல் வலி, கடுமையான நீரழப்பு, சோர்வு, வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற பாதிப்புகளும் ஏற்படுகிறது.

தற்போது கோடை காலம் துவங்கி இருப்பதால் குழந்தைகள் அதிக அளவில் இந்த நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இது ஒரு தொற்று நோயாக இருப்பதால் பெரியவர்களும் அதிக அளவில் பாதிக்கப்பட்டு சிரமத்தை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த காய்ச்சல் தொடர்பாக பொது சுகாதாரத் துறை நிபுணர் ஒருவர் கூறுகையில், சுகாதாரமின்மையால் இந்த காய்ச்சல் பரவுகிறது என்றும் அனைவரும் சுகாதாரத்தோடு இருப்பது அவசியம் எனவும் கூறினார். பள்ளி செல்லும் குழந்தைகள், விளையாடிவிட்டு வீட்டிற்கு வரும்போதும் கட்டாயம் கை கால் முகத்தை கழுவுவது அவசியம் எனவும் தக்காளி காய்ச்சலை பொருத்தவரை ஒரு வாரத்திற்குள் தானாகவே சரியாகிவிடும் என்றும் அதே நேரம் பாதிப்புக்கு ஏற்ப சிகிச்சை பெறுவது அவசியம் என்றும் கூறியுள்ளார்.

இந்த தக்காளி காய்ச்சல் தீவிர பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும் தொற்று பரவல் அதிகரித்து உடல் சோர்வை உண்டாக்கும். அதனால் அறிகுறிகள் ஏதேனும் தெரிந்தால் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.

இதையும் படிங்க: தாய்மொழியில் தொழில்நுட்ப கல்வி பாடப்புத்தகங்கள்..! ஏஐசிடிஇ அழைப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share