×
 

இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதி விபத்து.. கணவன் கண் முன்னே மனைவி மற்றும் மகன் பலி..

கள்ளக்குறிச்சி அருகே இரு சக்கர வாகனத்தின் மீது டிராக்டர் மோதிய வடிவத்தில் கணவன் கண் முன்னே மனைவியும் அவனும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மாதவ சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சுதா. இவர் அவரது மகன் மற்றும் கணவர் கண்ணனுடன் இருசக்கர வாகனத்தில் கோயிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளனர். அப்போது தலைமை தபால் நிலையம் முன்பு கரும்பு லோடு ஏற்றிச்சென்ற டிராக்டர் ஒன்று இவர்கள் மூவர் சென்ற இருசக்கர வாகனத்தை முந்தி செல்ல முயன்றுள்ளது. அப்போது டிராக்டர் இருசக்கர வாகனத்தின் மீது உரசி உள்ளது. இதில் நிலைதடுமாறி இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த சுதா மற்றும் அவரது மகன் கௌதம் ஆகிய இருவரும் மீது டிராக்டர் ஏறிஇறங்கி உள்ளது. இதில் சுதா மற்றும் கௌதம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடல்களை கைப்பற்றி உடற் கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலத்த காயமடைந்த சுதா கணவரான கண்ணனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீஸ் சார் விபத்தை ஏற்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்து காவல் நிலையம் எடுத்துச் சென்றனர். முன்னதாக டிராக்டர் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவன் கண்முன்னே மனைவி மற்றும் மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: நெற்பயிர்களை அழித்த சப்-இன்ஸ்பெக்டர் மீது ஒழுங்கு நடவடிக்கை.. மனித உரிமை ஆணையம் பரிந்துரை..!

இதையும் படிங்க: அமித் ஷா அணிந்திருக்கும் சால்வை இவ்வளவு ஸ்பெஷலானதா?... கோவை பாஜக கொடுத்த அசத்தல் நினைவு பரிசு...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share