உலகமே ஷாக்... இந்தியா மீது வர்த்தகப்போர் தொடங்கிய டிரம்ப்... நள்ளிரவில் அதிரடி
பரஸ்பர வரிவிதிப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவிற்கு 26 சதவீத வரிவிதித்துள்ளார்.
அமெரிக்காவின் பரஸ்பர வரிவிதிப்பு தொடர்பான அறிவிப்பை நள்ளிரவு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்டார். இந்த நாள் அமெரிக்காவின் விடுதலை நாள் என்று கூறி வரிவிதிப்பு தொடர்பான உரையை தொடங்கிய அவர் பல காலங்களாக அருகில் உள்ள நண்பர்களாலும் எதிரிகளாலும் அமெரிக்கா சூறையாடப்பட்டுள்ளதாகக் கூறினார். தொடர்ந்து பேசிய ட்ரம்ப் மற்ற நாடுகள் விதிக்கும் வர்த்தக வரிகளில் பாதி அளவு வரியை அமெரிக்கா வசூலிக்கும் என அறிவித்தார்.
அதன்படி இந்தியாவிற்கு 26 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது. சீனாவிற்கு 34 சதவீதமும், தென்னாப்பிரிக்காவிற்கு 30 சதவீதமும், ஜப்பானிற்கு 24 சதவீதமும் வரிவிதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 20 சதவீதமும், சிங்கப்பூருக்கு 10 சதவீதமும் வரிவிதிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கம்போடியாவிற்கு 49 சதவீதமும், வியட்னாமிற்கு 46 சதவீதமும் அமெரிக்க அதிபர் டிரம்ப் வரி விதித்துள்ளார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி ‘ரொம்ப ஸ்மார்ட்’..! பரஸ்பர வரி சிறப்பாக செயல்படும்: அதிபர் ட்ரம்ப் புகழாரம்..!
அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் குறைந்தபட்சமாக 10 சதவீத வரி விதிக்கப்பட உள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்தார் வரிவிதிப்பை தவிர்க்க விரும்பும் நிறுவனங்கள் அமெரிக்காவில் தங்களின் உற்பத்தியை தொடங்குவதன் மூலம் வரியில் இருந்து முழுமையாக விலக்கு பெறலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
வரிவிதிப்பில் இருந்து விலக்கு கோறும் நாடுகளின் தலைவர்கள் அமெரிக்க பொருட்களுக்கு விதிக்கும் இறக்குமதி வரியை குறைத்துவிட்டு பரஸ்பர வரி குறைப்பை பெறுங்கள் என்றும் ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நட்பு நாடான இந்தியா மீது டிரம்ப் 26 சதவீத பரஸ்பர வரி விதித்துள்ளது வர்த்தகப்போருக்கு சமமானது என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: அமெரிக்கா வரி போர் அச்சுறுத்தலை சமாளிக்க கொள்கை தேவை.. ப.சிதம்பரம் வலியுறுத்தல்..!