“with பழனிசாமியா” “without பழனசாமியா”... எடப்பாடியாருக்கு கெத்தா சவால் விட்ட டிடிவி தினகரன்...!
அதிமுக கூட்டணி இணைவது உறுதி என்றும், அதில் பழனிசாமி இருப்பாரா? இல்லையா? என்பது தான் சந்தேகம் என டிடிவி தினகரன் பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
அதிமுக கூட்டணி இணைவது உறுதி என்றும், அதில் பழனிசாமி இருப்பாரா? இல்லையா? என்பது தான் சந்தேகம் என டிடிவி தினகரன் பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
திருச்சியில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், திமுக திருந்தி இருப்பார்கள் என நம்பி தான் 2021 ல் மக்கள் திமுக விற்கு வாக்களித்தார்கள் ஆனால் அவர்கள் திருந்தவில்லை.திமுக திட்டங்களை அறிவித்து நிதி ஒதுக்குவார்கள் ஆனால் அதை மக்களுக்காக செயல்படுத்த மாட்டார்கள்.
இதையும் படிங்க: பேரறிஞர் அண்ணா மட்டும் இருந்திருக்கணும்.. மும்மொழியை ஏற்றுக் கொண்டிருப்பார்.. டிடிவி தினகரன் ஒரே போடு!
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்த பின் கடன்கள் குறைக்கப்பட்டு அனைத்து மக்களுக்குமான ஊழலற்ற ஆட்சியாக இருக்கும். திமுக வை வீழ்த்த தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைய வேண்டும் அது with பழனிசாமியா without பழனிசாமியா என்பது தெரியாது என்றார்.
தமிழ்நாட்டில் பா.ஜ.கவால் ஜெயலலிதாவின் ஆட்சியை வழங்க முடியும். மோடியும் ஜெயலலிதாவுன் நல்ல நண்பர்கள். மோடியா லேடியா என ஜெயலலிதா கேட்டது பிரதமராக மோடி வேண்டுமா முதலமைச்சராக ஜெயலலிதா வேண்டுமா என்கிற அடிப்படையில் கேட்டது தான்.பெரியார் கூறிய கருத்தை தான் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறினார் அதில் எந்த தவறும் இல்லை என்றார்.
இதையும் படிங்க: 'பாஜகவுடன் கூட்டணிக்கு அதிமுக தவம் கிடக்கிறது…! மீண்டும் கலைத்துப் போட்டு ஆடும் அண்ணாமலை..!