×
 

70000 பூத் கமிட்டி செயலாளர்கள்..! நடைபயணம். மாநாடு.. பகீர் கிளப்பும் விஜய் தேர்தல் வியூகம்

தமிழகம் முழுவதும் சுமார் 70000 பூத் கமிட்டி செயலாளர்களை நியமிக்க உள்ளதாக நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம்  தரப்பிலிருந்து செய்திகள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டுக்கு மேல் உள்ள நிலையில் தற்போது இருந்து தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது பிரதான கட்சிகளான திமுக,அதிமுக தேர்தல் வியூகங்களோடு மட்டுமின்றி ஆயத்தப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜம்போ கட்சிகளான திமுக, அதிமுகவை எதிர் கொள்ள வேண்டும் என்றால் கட்சி கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் அதோடு இந்த சோசியல் மீடியா யுகத்தில் தேவையான அளவிற்கு வியூகங்களை வகுத்து அவற்றை செயல்படுத்தினால் மட்டுமே வெற்றி  சாத்தியமாகும்.

இதனைப் புரிந்து கொண்ட நடிகர் விஜய் சமீபத்தில் கட்சியில் சேர்ந்த தொழிலதிபரும் வியூக வகுப்பாளருமான ஆதவ் அர்ஜுனா துணையோடு பிரபல வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை சந்தித்து முதல் கட்ட பேச்சு வார்த்தையை முடித்தார்.

இதையும் படிங்க: பிரசாந்த் கிஷோர் - எடப்பாடி ரகசிய சந்திப்பு..! திமுகவுக்கு வேலை செய்த ஊழியர்களை மடக்கும் பிகே டீம்

அதன் அடிப்படையில் பல மணி நேரம் நீடித்த ஆலோசனையில் சுமார் 70 ஆயிரம் பூத் கமிட்டி நிர்வாகிகளை அதாவது செயலாளர்களை உடனடியாக நியமிப்பதற்கான வேலைகளை ஆரம்பிக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தேர்தல் நெருங்க நெருங்க தமிழகம் முழுவதும் மக்களை நேரடியாக சந்திக்கும் வகையில் நடை பயணம்,தொடர் மாநாடுகள்,என ஒரு கலக்கு கலக்க திட்டமிட்டு இருக்கிறார்களாம் 
 ஏற்கனவே வியூக வகுப்பாளராக இருந்த ஜான் ஆரோக்யசாமி மெல்ல மெல்ல ஓரம் நகர்த்தப்பட்டு தற்போது ஆதவ் அர்ஜுனா மற்றும் பிரசாந்த் கிஷோர் குழுவினர் கட்சியின் செயல்பாடுகள் மற்றும் யூகங்களை கையில் எடுக்க ஆரம்பித்திருக்கிறார்களாம்.

இதற்காக ஸ்பெஷல் வார் ரூம் ஒன்றும் ஏற்படுத்தப்படுகிறதாம்.  ஏற்கனவே பிரசாந்த் கிஷோரிடம் நடிகர் விஜய் கூறியபடி வீட்டிற்கு ஒரு ஓட்டு என்றால் கூட நமது வாக்கு சதவீதம் பல மடங்கு உயர்ந்து விடும் மேலும் 70 ஆயிரம் பூத் கமிட்டி செயலாளர்களை நியமித்து விட்டால் அந்த வாக்குகள் உறுதிப்படுத்தப்பட்டு விடும் என தெரிவித்தாராம்.

முன்பெல்லாம் தேர்தலுக்கு ஒரு மாதம் அல்லது இரண்டு மாதத்திற்கு முன்பு தான் அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பிக்கும் தற்போதையெல்லாம் போட்டி மற்றும் கட்சிகள் அதிகமாகி விட்டதால் ஓர் ஆண்டுக்கு முன்பாகவே வேலைகளை தொடங்கி விடுகின்றனர் அரசியல் கட்சியினர்.

இதையும் படிங்க: தவெக நிர்வாகிகளுடன் 2-வது நாளாக பிரஷாந்த் கிஷோர் ஆலோசனை..

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share