தவெக முதல் பொதுக்குழுவுக்கு தயாராகும் கமகம விருந்து.. என்ன ஸ்பெஷல்?
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு இன்று நடைபெறவுள்ளதால் தடபுடல் விருந்து தயாராகி வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு இன்று நடைபெறவுள்ளதால் தடபுடல் விருந்து தயாராகி வருகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிடுவோம்
என ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், அதற்கான ஆயத்த பணிகளை தவெக தற்போதிலிருந்தே மேற்கொண்டு வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநில நிர்வாகிகள், மாவட்ட வாரியாக செயலாளர், பொருளாளர், இணைச் செயலாளர், 2 துணைச் செயலாளர்கள் என 5 பேரும், பொதுக்குழு உறுப்பினர்கள் 10 பேரும் என 15 பேர் பங்கேற்கின்றனர். மேலும், மாவட்டம் தோறும் ஒரு பெண் பிரதிநிதியும் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொள்கிறார். அந்த வகையில், மொத்தம் 2,500 பேர் கூட்டத்தில் பங்கேற்க இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் கியூ.ஆர். கோடுடன் கூடிய டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புஸ்ஸி ஆனந்த் தான் விஜய் கட்சியின் முதல்வர் வேட்பாளர் ..! அதிர வைக்கும் தவெக நிர்வாகிகள்..!
பொதுக்குழுவில் பங்கேற்பவர்களுக்கு சைவ மட்டன் பிரியாணி உட்பட 21 வகையான மெனு அடங்கிய மதிய உணவு வழங்கப்பட உள்ளது. வெஜ் மட்டன் பிரியாணி, சைவ மீன் குழம்பு, சாம்பார், மிளகு ரசம், அவியல், ஆனியன் மணிலா, பக்கோடா, உருளை பட்டாணி வறுவல், தயிர் வடை, அப்பளம், வெற்றிலை பாயாசம், மோர், ஐஸ்கிரீம், மால் பூவா ஸ்வீட், வெஜ் சூப், ஊறுகாய், இஞ்சி துவையல், தயிர் பச்சடி, சப்பாத்தி, பன்னீர் பட்டர் மசாலா, சாதம், இறால் 65, என ஒட்டுமொத்தமாக 21 வகையான உணவு உணவுகள் இங்கு மதிய உணவாக வழங்கப்பட்டிருக்கிறது. தமிழகத்திலிருந்து இன்று காலை 6:00 மணி முதலே பெரும்பாலான தொண்டர்கள் நிர்வாகிகள் இங்கு திரண்டிருப்பதால் காலை உணவும் வழங்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: தனிமைப்படுத்தப்படுகிறதா தவெக... கள நிலவரம் என்ன?