×
 

முழு இஸ்லாமியராகவே மாறிட்டாரே... தலையில் குல்லா, வெள்ளை லுங்கி சட்டையில் மாஸ் என்ட்ரி கொடுத்த விஜய்...!

தவெக தலைவர் விஜய், ரம்லான் தொழுகையில் பங்கேற்கக்கூடிய இஸ்லாமியரைப் போலவே உடையணிந்து வந்திருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இன்று இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதாவது ரமலான் மாதத்தை முன்னிட்டு இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கும் நிலையில், இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்றுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ அரங்கத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. தவெக தலைவர் விஜய் நேரடியாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதால், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும்  ‌தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஒய்எம்சிஏ மைதானத்தில் ஆய்வு நடத்தியதோடு, அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்து வந்தனர். இந்த நிகழ்ச்சியில் சுமார் 3000 பேர் வரை கலந்து கொள்ள இருப்பதாக புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ள நிலையில் இதற்காக அழைப்பிதழும் கொடுக்கப்பட்டுள்ளது. 

3500 பேருக்கு மட்டன் பிரியாணி சுடச்சுட தயார் செய்யப்பட்டுள்ளது. இதற்கான 600 கிலோ அரிசி மற்றும் 900 கிலோ ஆட்டுக்கறி பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் மட்டன் நோன்பு கஞ்சி, சிக்கன் 65, கத்தரிக்காய் சட்னி, வெங்காய ரைத்தா, பிரட் அல்வா ஆகியவையும் தயாராகியுள்ளது. இப்தார் கிட் பாக்ஸ் வழக்கப்படவுள்ளது. அதில் பேரீச்சம்பழம், 2 வெங்காய சமோசா, ஒரு பாட்டில் குளிர்பானம், ஒரு வாட்டர் பாட்டில், மட்டன் நோன்பு கஞ்சி ஆகியவை பரிமாறப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க மாவட்டத்திற்கு 5 இஸ்லாமிய நிர்வாகிகளையும் பாஸ் கொடுத்து தவெக அழைத்துள்ளது. ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களுக்கும் 5 பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இப்தார் நோன்பு நிகழ்ச்சிக்கு எந்த அரசியல் சாயமும் பூசக்கூடாது என்றும், கட்சித் துண்டுகள் பேட்சகள் போன்றவற்றை அணிந்து வர வேண்டாம் என்றும் விஜய் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. 

இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள தவெக தலைவர் விஜய், ரம்லான் தொழுகையில் பங்கேற்கக்கூடிய இஸ்லாமியரைப் போலவே உடையணிந்து வந்திருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. வெள்ளை, லுங்கி சட்டையில் தலையில் இஸ்லாமியர்களைப் போல் குல்லா அணிந்து விஜய், இந்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். முதல் முறையாக தவெக சார்பில் நோன்பு திறக்கப்படுவதால் விஜய் இஸ்லாமியர்களுடன் இணைந்து தொழுகை நடத்தவுள்ளதாகவும், அதன் பின்னர் நோன்பு திறக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இப்தார் விருந்தில் பங்கேற்க ராயப்பேட்டை வந்த தவெக தலைவர் விஜய்! #TVKVijay pic.twitter.com/G7a5smgHER

— Jayachandran Dhamodharan (@Jayachandran_DJ) March 7, 2025

இதையும் படிங்க: தவெக நோன்பு திறக்கும் நிகழ்ச்சி... சுடசுட தயாராகும் உணவு வகைகள்... ஏற்பாடுகள் என்னென்ன?

இதையும் படிங்க: சினிமாவில் மோசமாக சித்தரித்த விஜய்..! சாபத்தை போக்கவா இப்தார் நோன்பு..? பின்னணி என்ன..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share