×
 

தமிழகம் முழுவதும் தடம் பதிக்கப்போகும் விஜய்... முக்கிய அறிவிப்பால் திக்குமுக்காடும் தவெக தொண்டர்கள்...! 

பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு ஏப்ரல், மே மாதங்களில் தமிழகம் முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தவெகவின் செயற்குழு பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கான இடத்தை தேர்வு செய்வதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்த நிலையில், இன்று அக்கட்சியின் பொது செயலாளர் ஆனந்த் தனியார் நட்சத்திர விடுதியில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வால் தவெக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சித் தொடங்கிய நடிகர் விஜய் 2026 சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து தீவிரமாக பணியாற்றி வருகிறார். தமிழக வெற்றிக் கழகம் ஓராண்டை நிறைவு செய்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில் கட்சியில் இணைந்த ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், ராஜ் மோகன் உள்ளிட்டோருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 

தமிழகம் முழுவதும் உள்ள பல மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்களும் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் தவெகவின் 2026 ஆம் ஆண்டுக்கான செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தை வரும் 26 ஆம் தேதி நடத்த அக்கட்சி திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை தமிழக வெற்றிக் கழகத்தின் பொது செயலாளர் ஆனந்த் மேற்கொண்டு வருகிறார். ஆனால் பொதுக்குழு கூட்டம் நடத்த இடம் தேர்வு செய்வதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்ததாக தகவல் வெளியானது இந்த சூழலில் சென்னையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் செயற்குழு பொதுக்குழு கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டது. 

ஆனால் தமிழக வெற்றிக் கழகம் குறிப்பிட்ட அதே நாளில் மற்றொரு நிகழ்ச்சி இருப்பதால் அனுமதி கிடைக்கவில்லை என தகவல் வெளியானது. அதுமட்டுமின்றி தவெக பொதுக்குழு கூட்டம் நடத்த மூன்று இடங்களில் அனுமதி கேட்டும், அனுமதி கிடைக்காததால் அக்கட்சி நிர்வாகிகள் கலக்கமடைந்தனர். இந்த நிலையில்தான் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொது செயலாளர் ஆனந்த் ஆய்வு செய்தார். ஆய்வின் போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் பாதுகாப்புக்காக பவுன்சர்களை பணியமர்த்துவது உள்ளிட்டவை குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

இதையும் படிங்க: நான் தோற்றுப்போன அரசியல்வாதியா..? கமல் சொன்ன அந்த உண்மை... விஜய் ரசிகர்கள் ஆவேசம்..!

பொது செயலாளர் ஆய்வால் விரைவில் குறிப்பிட்ட தேதியில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் தவெக தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்த பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. அதேபோல பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு ஏப்ரல், மே மாதங்களில் தமிழகம் முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: '1 மில்லியன் ட்வீட் அசிங்கத்துக்கு பழி தீர்க்க தெருவுல போய் கோலம்போடு...' குறுக்கே புகுந்த தவெக..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share