×
 

இனி அமெரிக்க பாஸ்போர்ட்டுகளில் கூட இது இருக்கக்கூடாது ... அரியணை ஏறியதும் உலக நாடுகளை அதிர வைத்த டிரம்ப்! 

அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் அரியணை ஏறிய முதல் நாளிலேயே அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து உலக நாடுகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். 

அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் அரியணை ஏறிய முதல் நாளிலேயே அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து உலக நாடுகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். 

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதில் இருந்தே அவரது பதவியேற்பை அமெரிக்க மக்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருந்தனர். குறிப்பாக பதவியேற்பு நாளில் டொனால்ட் டிரம்ப் நாட்டு மக்களுக்காக என்னென்ன மாதிரியான அறிவிப்புகளை வெளியிடுவார், வாக்குறுதிகளைக் கொடுப்பார் என்றெல்லாம் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள். அமெரிக்க வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க அத்தியாயத்தை குறிக்கும் வகையில், தனது முதல் நாளில் அதிக எண்ணிக்கையிலான நிர்வாக உத்தரவுகளை டிரம்ப் பிறப்பித்துள்ளார். 

அதில் குறிப்பாக இனி அமெரிக்காவில் ஆண், பெண் என இரு பாலியனம் மட்டுமே,  திருநங்கைகளை பெண்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பு உலக நாடுகளை உற்றுநோக்க வைத்துள்ளது. 

இதையும் படிங்க: ஒரே நாளில், 2,500 போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு 'பொது மன்னிப்பு' பதவி விலகும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிரடி

அமெரிக்க கேபிடலில் டிரம்ப் நிகழ்த்திய தனது பதவியேற்பு உரையின் போது, “இன்றைய நிலவரப்படி, ஆண் மற்றும் பெண் என்ற இரண்டு பாலினங்கள் மட்டுமே உள்ளன என்பது அமெரிக்க அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ கொள்கையாக இருக்கும். பொது மற்றும் தனியார் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் இனம் மற்றும் பாலினத்தை சமூக ரீதியாக வடிவமைக்க முயற்சிக்கும் அரசாங்கக் கொள்கையையும் நான் முடிவுக்குக் கொண்டுவருவேன்" என்று கூறினார்.

இதனால் இனி அமெரிக்க பாஸ்போர்ட்களில் கூட மூன்றாம் பாலினத்தை அங்கீகரிக்கும் X குறி அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு கொண்டு வரப்படும் என அறிவித்தார். பன்முகத்தன்மை என்ற பெயரில் ஜோ பைடன் அரசாங்கத்தால் பாதுகாப்பட்ட பாலினம் சார்ந்த கொள்கைகள் இனி அமெரிக்காவில் எடுபடாது என டிரம்ப் தெரிவித்துள்ளார். 

பாலினம் மட்டுமின்றி சுற்றுச்சூழல் நீதித் திட்டங்கள், சமத்துவம் தொடர்பான மானியங்கள், சமத்துவ செயல் திட்டங்கள், சமத்துவ முயற்சிகள் என அனைத்து பாகுபாடன திட்டங்களையும் முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் அரசு திட்டமிட்டுள்ளது. 

டிரம்பின் இந்த உத்தரவு வந்த மறுகணமே அமெரிக்க அதிகாரிகள் தீயாய் வேலையை ஆரம்பித்துவிட்டார்கள். பாஸ்போர்ட், விசாக்கள் மற்றும் குளோபல் என்ட்ரி கார்டுகள் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ ஆவணங்கள் அனைத்திலும் நபரின் உயிரியியல் பூர்வமான பாலினத்தை மட்டுமே இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். 

மேலும் சிறைச்சாலைக, புலம் பெயர்ந்தோருக்கான தங்குமிடங்கள், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கான தங்குமிடங்கள் என அனைத்தும் ஒற்றை பாலின அடிப்படையிலேயே வழிநடத்தப்படவுள்ளன. 

இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் கூட மூன்றாம் பாலினத்தவர்களை ஏற்றுக்கொள்கிறார்கள். சமூக ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் தற்போது அவர்கள் சமமாக நடத்தப்பட்டு வருகிறார்கள். மூன்றாம் பாலினத்தவர், LQBT சமூகத்தினர் அவர்களுக்கிடையிலான உறவு பற்றி விழிப்புணர்வு இப்போது பெரும்பாலான நாடுகளின் கடைக்கோடி பகுதிகளைக் கூட அடைந்துள்ளது. அப்படியிருக்கையில், அமெரிக்கா போன்ற வல்லரசு நாடு இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டிருப்பது உலக நாடுகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 
 

இதையும் படிங்க: 3 இந்திய அணுசக்தி நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடு நீக்கம்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நடவடிக்கை...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share